மதம்

மரணப்படுக்கையிலும்
மார்தட்டி சொல்லும்
மனிதனின் மனப்பேய்..!

மதம் கொன்று
மனிதம் வெல்லும்
மனிதனுண்டோ..!

வாழ்க்கை தர்மம்
வழிபோக்கிலே தடம்மாறி
மதபோதையானதே..!

வென்றவன் கால்பதித்து
கலாச்சாரம்
கற்றுகொடுத்தான்..!

கலாச்சாரம் வேறுபடுத்தி
மதமென்று அழகாக
பெயரிட்டுச்சென்றான்..!

தர்மங்கள் இருக்கும் வரை
தவறின்றி மனிதன்
ஒத்துழைத்தான்..!

மதம் பதித்து
வேற்றுமையை
நிலையக்கினான்..!

நான் கொண்ட மதம்
பெரிதாயிற்றே
நீ சின்னவன் ஆவாய்..!

உயிர்கொடு..!
என் மதம் கேட்கிறது…!

இதுவா மதம்..?

உயிர்துளைக்கும் மதமொன்றே
இறைவனடி என்றால்..!
நான் மதமற்றவனாகி விடுகிறேன்..

இறைவழி எனக்கு தேவையில்லை
மனிதம் கொண்ட மனிதனாகவே
வாழ்ந்துவிடுகிறேன்…!

எழுதியவர் : சிவா (12-Jul-14, 12:57 am)
Tanglish : matham
பார்வை : 170

மேலே