அதிசயம் நடந்து ஆறுதலும் தந்திடாதோ

​பாவத்தின் வழிவந்த பாவங்களா
பாதகமே புரியாத பாதசாரிகளா ​!
ஏழைஎனும் இனத்தின் இதயங்களா
ஏக்கமிகு வாழ்வே வறுமைக்கோடா !

உண்ணும் உணவே தினசரி கனவா
உருண்ட குழாய்களே உறைவிடமா
உடுத்திட உடையும் உலக அதிசயமா
உருகுது நெஞ்சம் நிலையை கண்டு !

ஏழ்மையென்ன எழுதாத உயிலா
ஏற்றமே வந்திடாதா வாழ்விலும் !
பிரிவினை ஏன்தானோ பிறப்பிலும்
சரிவினை காட்டுதே படைப்பிலும் !

கண்களும் கசிகிறதே கண்டதும்
நெஞ்சமும் பிசைகிறதே காட்சியும் !
அரசுகள் மாறினாலும் மாறவில்லையே
ஆள்பவர் இதயங்களும் இளகவில்லை !

பாவம் இவர்கள் பாவத்தின் சின்னங்களா
பாதையில் வாழ்பவர் பிறப்பின் தவறுகளா !
வாழ்க்கை மாறிட மாறுதலும் நிகழாதோ
அதிசயம் நடந்து ஆறுதலும் தந்திடாதோ !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Jul-14, 7:57 am)
பார்வை : 99

மேலே