ஒரு நாள் ஒரு கனவு

ஒரு நாள் ஒரு கனவு
இந்த கதை ஒரு மாணவனின் கனவு பற்றிய கதை..அந்த மாணவன் பெயர் குரு இவன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் இவனோடு பிறந்தவர்கள் ஒரு தங்கை அவள் பெயர் பிரியா..குரு இன்ஜினியரிங் 3 ஆம் ஆண்டு mechanical பிரிவில் பயின்று வருகிறான்..கதைக்குள் செல்வோம்..பொதுவாக எல்லா மாணவர்களுக்கும் ஒரு ஆசை உண்டு அது எப்படியாவது ஒரு வண்டி வாங்க வேண்டும் என்று அதே போல குருவிற்கும் ஒரு ஆசை ஆனால் அது அவனது கனவு..குரு 12 th படிக்கும் போது தன் அப்பாவிடம் வண்டி வாங்கி தருமாறு கேட்டான்,,அதற்கு அவன் அப்பா நீ 12 th எக்ஸாம் ல நல்ல மதிப்பெண் பெற்றால் வாங்கி தருகிறேன் என்றார்..குருவும் அதற்காக கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றான்...ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் தந்தையால் வண்டி வாங்கி கொடுக்க முடியவில்லை...அதனால் குரு முதலில் ஏமாற்றம் அடைந்தான் பின்னர் சூழ்நிலையை உணர்ந்து தன் கனவை கொஞ்சம் தள்ளி வைத்தான்..பின்னர் ஒரு நாள் மீண்டும் அவன் கனவு அவனிடம் வெளி பட்டது...காரணம் குரு அவனோடைய நண்பர்கள் ஆனா விஜய், சேது, கிருஷ்ணா,அன்பு .. (இவர்கள் நான்கு பேரும் குரு கூட சிறு வயதில் இருந்து ஒன்றாக படித்தவர்கள் இவர்கள் எப்போதும் ஒன்றாக தன் திரிவார்கள் கல்லூரியில் மற்ற நண்பர்கள் இருந்தாலும் குருவிற்கு இவர்கள் தன் முதன்மை ஆனவர்கள்...இவர்களில் விஜய்,சேது,கிருஷ்ணா ஆகியோரிடம் வண்டி வைத்திருகிறார்கள் அன்பு விடம் கிடையாது ஆனால் அனைவரும் கல்லூரிக்கு பஸ்சில் தான் வருவார்கள்..) ஆகியோரோடு நடந்து வரும் போது 1 st இயர் படிக்கும் மாணவன் ஒருவன் (குருவிற்கு பழக்கம் தான் ஆனால் அவன் ஓவராக சீன் போடுபவன்,) குருவிற்கு வண்டியில் சென்று கொண்டு கைய காட்டி
கொண்டு சீன் போட்டு செல்வான்..அதை பார்த்தவுடன் குருவிற்கு கோவம் வந்துவிட்டது...பின்னர் விட்டிற்கு வந்த குரு தன் கோவத்தை தன் அம்மாவிடம் போய் கொடிட்டினான்..அம்மா என்ன விட சின்ன பையன்லாம் வண்டி வச்சிட்டு என்கிட்ட சீன் போட்டுட்டு போறான் எனக்கு ஒரு வண்டி வாங்கி கொடுமா..அதற்கு அவன் அம்மா என்கிட்ட கேக்க நானா சம்பாதிகன்??போய் அப்பட்ட கேளு என்ன தொந்தரவு பண்ணாத நைட் சாப்பாடு ரெடி பண்ணனும்...குரு மனசுக்குள் நினைத்துகொண்டான் "ஆமா அவர் கிட்ட கேட்ட மட்டும் வாங்கி கொடுக்கவ போறாரு"..அப்போது தூரத்தில் இருந்த அப்பா என்னடி அம்மாவும் பிள்ளையும் சண்ட போட்டுகிட்டு இருக்கீங்க...அதற்கு அம்மா ஒன்னும் இல்லங்க சும்மா பேசி கிட்டு இருந்தோம்...என்று பதில் அளித்தார்...குரு போய் டிவி பாக்க ஆரம்பித்தான்..பின்னர் இரவு உணவு உண்டு உறங்க சென்று விட்டான்..அடுத்த நாள் காலை குருவிற்கு பிறந்த நாள்,அவன் எழுந்த வுடன் மொபைல் எடுத்து பார்த்தான் அவன் நண்பர்கள் அவனுக்கு வாழ்த்து அனுப்பி இருந்தார்கள்...அவன் அதற்கு பதில் அளித்து விட்டு வெளியே வந்தான் அப்போது அவன் அப்பா அம்மா தங்கை பிரியா அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்..அவனுடைய அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கினான்..அவன் அம்மா,,போ போய் குளிச்சிட்டு கோயிலுக்கு போய்ட்டு வா என்றாள்..அவனும் சரி என்று கூறி காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு வந்தான்..அம்மா நான் கோயிலுக்கு போய்ட்டு வரன்னு சொல்லி கிளம்பினான்...அவனுடைய
அப்பா நானும் கடைக்கு போய்ட்டு வரன்னு சொல்லி அவரும் கிளம்பினர்...கோயில் போய் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்ததும் அவனுக்கு போன் வந்தது எடுத்து பார்த்தான் அது அவனுடைய காதலி சுருதி (ஸ்ருதியும் குருவும் 11ஆம் வகுப்பு படிக்கும் போது லவ் பண்ண ஆரம்பித்தார்கள்)..உடனே அட்டெண்ட் பண்ணி பேசினான் ..அவள் அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறினால்..அவனும் தங்க யு என்றான்..அவள் நான் தான் உனக்கு பிரஸ்ட் விஷ் பண்ணனும்னு 12 மணிக்கு கால் பண்ணன் ஏன்டா எடுகல என்று அவனை செல்லமாக கோபித்தல்..சாரி டி நல்ல துங்கிடன் அதன் கால் எடுக்க முடியல என்று அவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டான் அவளிடம் பேசி கொண்டே விட்டிற்குள் நுழைந்தான்...சிறிது நேரம் கழித்து அவனுடைய அப்பா வாசலில் நின்று கொண்டு குருவின் அம்மாவை வெளியே வர சொன்னார்...இந்த வராங்க என்று பதில் அளித்து வாசலுக்கு சென்றால்..என்னங்க என்று தன் கணவரிடம் கேட்டாள்..குருவ கூபிடு என்று கூறினார்...டேய் குரு இங்க வா டா என்று அவன் அம்மா அவனை அழைத்தாள் அவனும் போன் பேசி கொண்டே இந்த வாரன்மா என்று கூறிவிட்டு அவன் காதலியிடம் நான் உன்னக்கு அப்பறமா கால் பண்றனு சொல்லி கட் பண்ணிட்டு என்னமா என்ற படி சென்றான்..அங்கே அவனுடைய அப்பா கையில் சாவி வைத்து கொண்டு பூஜை போட்ட புது வண்டியுடன் நின்று கொண்டு இருந்தார் அதை பார்த்த குருவிற்கு ஆச்சரியம்...அப்பா அவனிடம் சாவியை கொடுத்து இந்த உன் பிறந்தநாள் பரிசு என்றவுடன் குருவால் நம்பவே முடியவில்லை..சாவியை வாங்கி கொண்டு வண்டியின் அருகில் சென்று வண்டியில் அமர்ந்தான் நீண்ட நாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் தன் கண்கள் கலங்க அப்பாவை பார்த்து தேங்க்ஸ்பா என்றான்....அப்போது அவன் தங்கை அங்கு வந்து வண்டி வாங்கி கொதுதுடீன்களாபா நல்ல இருக்கு..டேய் அண்ணா என்னை வைத்து ஒரு ரவுண்டு கூட்டிட்டு போடா என்றாள்..போடி உன்ன அப்றமா கூட்டிட்டு போறான் என்று சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி கிளம்பி விட்டான்...அப்பா பாருங்கபா என்ன கூட்டிட்டு போக மாட்டிகனு குறை கூறினால்...அதற்கு விடுமா நீயும் 12 th ல நல்ல மார்க் வாங்கு உனக்கும் வண்டி வாங்கி தரன்னு அவளை தட்டி கொடுத்தார்..அப்போ அவன் என்ன கூட்டிட்டு போகத்துக்கு ஏதும் சொல்ல மாட்டிங்களா என்றாள்...
அம்மா : சரி விடு டி அவன் தான் அப்றமா கூட்டிட்டு போர்னு சொல்லிருகான்ல... இபோ போ போய் ஸ்கூல் கு கிளம்பு,,....! தன் கணவரிடம் ஏங்க வண்டி எபோ வாங்குனீங்க எப்படி வாங்கினீங்க என்கிட்ட சொல்லவே இல்ல..
அப்பா : நேத்துக்கு முந்தாநேத்து வாங்குன இந்த மாசம் இன்சென்டிவே வந்துச்சி சரி இவனுக்கு வண்டி வாங்கித்தாரனு சொல்லி இருந்தல சரி பிறந்தநாளுக்கு surprise கிபிட் கொடுக்கலாம்னு போய் ஆர்டர் பண்ணி இன்னைக்கு டெலிவரி பண்ணனும் ஷோவ்ரூம் ல சொன்ன அவங்க இன்னைக்கு காலைல கொண்டு வந்து போன் பண்ணங்க நான் போய் வாங்கி பூஜை பண்ணிட்டு வந்தான்..
அம்மா : நீங்க பாட்டுக்கு அவனக்கு வண்டி வங்கிடீங்க அவனுக்கு புடிச்ச வண்டியன்னு தெரியலல..
அப்பா : அவன் சும்மா இருந்தாலும் நீ விட மாட்ட போல..எல்லாம் அவனுக்கு புடிச்ச வண்டி தான் இலாட்டி அதா ஒட்டுவான...
தங்கை : ஸ்கூல் க்கு கிளம்பி கொண்டே...அவன் மூஞ்சிக்கு இந்த வண்டிலாம் ஜாஸ்தி மா என்றாள்..
அப்பா :சரி விடு சாப்பாடு வை சாப்ட்டு ஆபீஸ்கு கிளம்பனும்..
தங்கை: எனக்கும் எடுத்து வை மா நானும் கிளம்பிட்டான் என்றாள்..
இருவர் அமர்ந்து சாப்ட்டு முடித்தனர்..தங்கை அம்மா அப்பாவிடம் சொல்லி ஸ்கூல் க்கு கிளம்பினால் அப்போது அவனும் ரவுண்டு அடித்து விட்டு வந்தான்..தங்கையை பார்த்து ஸ்கூல் க்கு கிளம்பிட்டியா என்றான்..அதற்கு இல்ல பக்கத்துக்கு விட்டுல மீனா அக்கா கூட சீட் விளையாட போறான் ஆள் இல்லன்னு சொன்னங்க அதான் என்று நக்கலாக பதில் அளித்தால்..உடனே "குரு உனக்கு கொழுப்பு டி சாயங்காலம் நான் உன்ன ஸ்கூல் க்கு வந்து கூப்பிட வாரன் ஓகே யா என்றான்"..ஆச்சரியமா இருக்கு, இப்போ கூட்டிட்டு போயன் என்றாள்...என்னக்கு இபோ வேலை இருக்கு சாயங்காலம் வாரானு சொன்னான் ஸ்கூல் வேன் வந்தது அதில் அவளை எத்தி விட்டு டாட்டா காட்டி அனுப்பி வைத்தான்..விட்டிற்குள் நுழைந்தான் வந்தவுடன் அவன் அப்பா வண்டி எப்படி இருக்கு டா என்று கேட்டார்...சூப்பரா இருக்குபா என்று கூறினான்...சரி அம்மாட்ட காசு கொடுத்து இருக்கான் வங்கிகொனு நான் ஆபீஸ் போய்ட்டு வந்துடுரனு சொல்லி விடை பெற்றார்...
அம்மா : குரு சாப்ட உக்காரு என்று சாப்பாடு பறுமாறினால்..
அவனும் சாப்ட்டு முடித்து விட்டு அம்மா காசு தாமா நா வெளியே போயிட்டு வரன்னு சொன்னான்..அவன் அம்மா இந்த 2000 ரூபா என்றாள்....அம்மா இது பத்தாதுமா கூட தா என்றான். அப்பா இவளவு தான் கூடுதாங்க என்றாள்...
அம்மா : ஆமா எதுக்கு உனக்கு இவ்வளவு காசு.
குரு : அம்மா பிரிஎண்ட்ஸ் க்கு ட்ரீட் கொடுக்கணும் மா வண்டி வேற வாங்கி இருக்கு அதுக்கும் சேர்த்து வைக்கணும் அதான் கேட்டான்...
அம்மா :இப்போ பிறந்த நாளுக்கு மட்டும் வை அப்றமா பைக் வாங்குனதுக்கு இன்னொரு நாள் வச்சிகிலாம் என்றாள்..
குரு : சரி மா நான் கிளம்புறன்..மதியம் சாப்பிட வர மாட்டன் ப்ரிண்ட்ஸ் ஓட வெளிய சாப்டுகுரன் என்றான்..
அம்மா : அபோ இரு இந்து பாயசத்த குடிச்சிட்டு போ என்றாள்...
குருவும் பாயசத்தை ரூசி பார்த்து விட்டு கிளம்பினான்..பெட்ரோல் பங்க் ல 500 ரூபாக்கு பெட்ரோல் போட்டு விட்டு கிளம்பும் போது குருவின் நண்பன் கிருஷ்ணா போன் செய்தான் குரு வண்டியை ஓரமா நிறுத்திவிட்டு பேசினான்..
கிருஷ்ணா : டேய் மச்சி நம்ம எப்பவும் மீட் பண்ணுவோம்ல அந்த கிரௌண்ட்கு வா நான் குபிட வரட்ட டா..
(வழக்கமா கிருஷ்ணா தான் குருவ எங்கேயும் கூட்டிட்டு போவான்)
குரு : வேண்டாம் மச்சி நான் வந்துடுறன்..
கிருஷ்ணா( டேய் எப்படி டா வருவா என்று கேக்குறதுக்கு முன்னாடி குரு போன் கட் பண்ணிருவான்.).
விஜய் : என்னடா ஏங்க இருக்கனா??
கிருஷ்ணா : வந்துட்டு இருக்கான் போல..சேது எல்லாம் ரெடி பண்ணிடல ஒரு பிரப்லம்மும் வராதுல..
சேது : எல்லாம் பெர்பெக்டா இருக்கு கவலை படாத மாம்ஸ்..
அன்பு : அப்போ இன்னைக்கு புல் என்ஜாய்மென்ட் தான்..
தொலை துரத்தில் ஒரு வண்டி ஓன்று புழுதியை கிழப்பி கொண்டு வரும் அது யாரு என்று விஜய் கேட்ப்பான்..
தெரியல பக்கதுல வரட்டும் பாப்போம்னு சேது சொல்லுவான்..
வண்டி அவர்கள் அருகில் வந்ததும் சட் என்று brake பிடித்து நிப்பாட்டினான் குரு..
நான்கு பேருக்கும் ஒரே ஆச்சரியம்..என்னடா வண்டி எப்படி இருக்கு என்று கேட்டபடி வண்டியில் இருந்து இறங்கினான்..
விஜய் : வண்டி செமையா இருக்குடா மாப்ள அப்பா வாங்கி கொடுதுடரா???
குரு : ஆமா டா பர்த்டேக்கு surprise கிபிட் கொடுத்தாரு டா..
சேது :சொல்லவே இல்ல மாப்ள??
குரு : இன்னைக்கு காலைல தான் எனக்கே தெரியும் அதான் உங்களுக்கு surprise ah இருக்கட்டும்னு சொல்லல..
அன்பு : நீயும் வண்டி வங்கிடியா காங்க்ரத்ஸ் மச்சி...
குரு : தேங்க்ஸ் மாம்ஸ் நீயும் சீக்கிரம் வண்டி வாங்கிருவடா கவலை படாத..டோன்ட் வொர்ரி பி ஹாப்பி..
அன்பு : நான் எதுக்கு மச்சி கவலை பட போறான் என்கிட்ட நாலு வண்டி இருக்கே...
கிருஷ்ணா : டேய் போதும் டா என்று சொன்ன படியே அன்பை கேக் கொண்டு வர சொல்லி கண்ணை கட்டினான்..
அன்பு : ஓகே ஓகே..
குரு : என்னடா??
அன்பு கேக் கொண்டு வருவதை பார்த்து குருவிற்கு ஒரே surprise பின் கேக் வெட்டு டா என்று விஜய் சொல்லுவான் கேக் வெட்டி அனைவர்க்கும் ஊட்டி விடுவான்..அதை சேது போட்டோ எடுத்து கொண்டு இருப்பான்..பின்னர் கேக்கை முகத்தில் ராவி விளையாடி மகிழ்ந்தார்கள்...அதன்பின் முகத்தை கழுவி கொண்டு போட்டோ எடுத்தனர்..எடுத்த போட்டோ வை விஜய் fb ல உப்லோடு செய்தான்...
குரு : ரொம்ப தேங்க்ஸ் பிரிஎண்ட்ஸ் இதுவரைக்கும் என் பர்த்டேக்கு கேக் வெட்டி கொண்டாடுனது கிடையாது இதி தான் பிரஸ்ட் இத என் லைப்ல மறக்க மாட்டன்..
சேது : டேய் நமக்குள்ள எதுக்கு த தேங்க்ஸ்லாம் விடுடா..
அன்பு :ஆமா மச்சி இன்னைக்கு உன்னால நாங்களும் ஹாப்பியா இருக்கோம்..நாங்க தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..
குரு : என்ன திடிருன்னு கேக்ல்லா யாரு ஐடியா??
விஜய் : இப்போ இதான் மச்சி டிரண்டு..கிருஷ்ணா தான் ஐடியா கொடுத்தான்..
கிருஷ்ணா : சரி போதும்டா..அப்பறம் குரு இன்னைக்கு என்ன ட்ரீட் எபோ ட்ரீட்..
குரு : சாப்பாடு தான் மதியம் எதாவது ஹோடல்க்கு போலாம்..
சேது : சரி ஒரு ட்ரீட் ஹோட்டல் இன்னும் ஒன்னு எங்க???
குரு : ஒரு ட்ரீட் தான் இன்னும் ஒன்னு அப்றமா வைக்கான் காசு இல்ல...எல்லாரும் விட்டுல சொல்லிருங்க..என்று சொல்லி முடித்தவுடன் சுருதி போன் பண்ணினால் போனை எடுத்த குரு ஹலோ என்பான் என்னடா பர்த்டே கொண்டாடம்லா முடிஞ்சிதா டா என்பால்...அது எப்படி உனக்கு தெரியும்..fb ல பார்த்தன் விஜய் உன்ன tag பண்ணி இருந்தான்..அத பார்த்து கேட்டான்...என்கிட்ட சொல்லவே இல்ல ..எனக்கே தெரியாது டி..ஓகே ஒரு 11 மணிக்கு நம்ம வழக்கமா மீட் பண்ற பார்க்கு வா உனக்கு ஒரு surprise காத்துட்டு இருக்கு என்பான்..ஓகே நான் வந்துடுறன்..என்று சொல்லி போனை வைத்து விடுவாள்..
கிருஷ்ணா: டேய் சேது நா குரு வண்டில உகந்து இருக்குற மாதிரி ஒரு ஸ்டில் எடு டா என்பான்..
சேது : ஓகே டா..
அவன் உக்கார போவதை பார்த்த குரு டேய் உக்காரத என்பான் எதுக்கு டா என்று கிருஷ்ணா கேப்பான்...இல்ல நான் என் ஆள தான் முதல்ல வண்டில ஏதானும் ஆசை அப்றமா உக்காந்து ஸ்டில் எடு படுத்துட்டு ஸ்டில் எடு இப்போ வேண்டாம் ஓகே யா கோப படாத...
விஜய் : இந்த அசிங்கம் உனக்கு தேவையா???
அனைவரும் சிரித்தனர்.. மணி 10.45.. நான் கிளம்புறன் டா மதியம் 1.30 மணிக்கு எல்லாரும் செட்டிநாடு ஹோட்டல் வந்துருங்க என்று சொல்லி கொண்டு விடை பெற்றான் குரு...
பார்க் போய் சேர்ந்தான் அவன் காதலி சரியாக 11 மணிக்கு வந்தால் வந்ததும் நேரில் வாழ்த்துக்கள் சொல்லி தன்னுடைய பிறந்தநாள் பரிசான வாட்ச் அவன் கையில் கட்டி விட்டால்,..சூப்பர்ரா இருக்குடி என்று சொல்லிவிட்டு தன் நன்றியை அவளுக்கு கூறுவான்.. பின்னர் ரொம்ப நேரம் பேசி கொண்டு இருந்தனர்...
சுருதி :ஏதோ surprise ன்னு சொன்ன என்னடா ??
குரு : அதுவா கொஞ்சம் வெயிட் பண்ணு...
அவளும் சரி என்று சொல்லி கொஞ்ச நேரம் இருவரும் மொக்கை போட்டபின் குரு சொன்னனான் சுருதி
உன்ன விட ஒரு சுப்பர் figure ah கரெக்ட் பண்ணிடன் அதான் உனக்கு அவல அறிமுகம் படுத்தலாம்னு வர சொன்னான்..
இதை சொல்லியவுடன் ஸ்ருதிக்கு தூக்கி வாரி போட்டது...ஸ்ருதிக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தால்..அவள் கண்களில் கண்ணீர் முட்டியது..இன்னும் கொஞ்ச நேரத்துல அழுகுரமாதிரி இருந்தா அதை பார்த்து குரு,, சுருதி அவ வந்துடலாம் வெளிய நிக்குற வா போய் பாக்கலாம்னு சொல்லி குப்பிடுவான் அவளும் சரி வரவழ உண்டுஇலனு அக்கிரும்னு அவன் பின்னாடி போவா வாசல் பக்கம் போக போக ஸ்ருதிக்கு மனசு பட பட என அடிக்க ஆரம்பசிடும்..சுருதி வா இது தான் அந்த figure எப்படி இருக்கு என்று தன் வண்டியை காட்டுவான் குரு..ஒரு நிமிடம் ஸ்ருதிக்கு உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருக்கும்...சுருதி தன் கண்ணை துடைத்துவிட்டு குருவை மனசுக்குள் நல்ல திட்டிக்கிட்டு இருந்தால் அப்போது..
குரு : என்ன சுருதி எப்படி இருக்கா என்னோட புது ஆளு??
சுருதி : நல்ல இருக்கா ஆனா என் அளவுக்கு இல்ல..பர்த்டே கிபிட் அ என கேட்பாள்....
குரு :ஆமா அப்பா பர்சன்ட் பண்ணங்க..சரி வா ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்..
சுருதி :தயக்கமாய் நின்று கொண்டு இருப்பால்..
குரு :ஏறு சுருதி என்ன யோசிக்கிற..வண்டில உக்கார்துகே யோசிக்கிற நாளைக்குல நீ எப்படி என்ன நம்பி வருவ என்று சொலி முடிபதற்குள் வண்டியில் ஏறி விடுவாள்..
குரு : உன்ன வண்டில உக்கார வைகுரத்துக்கு இவளோ பேச வேண்டி இருக்கு..
சுருதி : எங்க டா போறோம்...
குரு : பீச்க்கு தான்....
பீச்க்கு போய்ட்டு இருக்கும் போது குரு ஸ்ருதிடம் உன்ன தான் பைக்ல first உக்கார வைக்கணும்ன்னு நினச்சிட்டு இருந்தான் பிரியா அவளை ஏத்திட்டு போக சொன்ன ஆனா நா அவ சண்ட போட்டு இவனிங் கூப்பிட வாரானு அவளை காம்ப்ரமைஸ் பண்ணி இருக்கான்...சுருதி,,சின்ன பொண்ணு தானடா ஏன் அவ ஆசைய நிறைவேத்த வேண்டித்தான என்பாள்..அதான் இவனிங் போறன்ல..நீ தன் முதல்ல இப்போ i am ஹாப்பி என்பான்...நான் உனக்கு அவ்வளவு முக்கியமா டா..என்பாள்..ஆமா நான் உனக்கு முக்கியமா இல்லையா என்பான்...நீ தாண்ட என் உயிர் என்பாள்..அதே மாதிரி சுருதி நீயும் எனக்கு...அய்யோ தாங்க முடியலடான்னு சுருதி சொல்லுவாள் உடனே அவன் தங்க முடியலனா ஒரு 500 ரூபா குடு என்பான்...அவள் போடா என செல்லமாக அடிப்பால்...பீச்க்கு வந்ததும் இருவரும் கை கோர்த்து நடந்து சென்று கடலில் காலை நனைத்து கொண்டு நிழலஉள்ள சிட்டிங் பெஞ்ச் ல போய் உக்காருவாங்க அப்போது குரு...சுருதி நான் பார்க்ல இன்னொரு பொண்ண கரெக்ட் பண்ணிடனு சொன்னவுடனே பயந்துடல..அதற்கு அவள் இல்லையே என்பாள்...பொய் சொல்லாதடி என்பான்...டேய் நான் எதுக்கு டா பொய் சொல்ல போறான் உன் மூஞ்சிக்கு நான் ஓகே சொன்னதே பெருசு இதுல இன்னொரு பொண்ணு எப்படி சொல்லும் இவன் என்னமோ காமெடி பண்ண போறன்னு நினைச்சன் அதே மாதிரி பண்ணிட டா..என்று சிரித்தால்...அதற்கு குரு உடனே அயோ செம்ம காமெடி அனா சிரிப்பு தான் வரல என்று சொல்லி அவளை கிண்டல் செய்தான்...சிறிது நேரம் பேசிக்கொண்டு கொண்டு ஜூஸ் பார்க் போய் ஜூஸ் குடித்தனர்...குடித்து விட்டு ஸ்ருதியை திருப்பி பார்க்ல கொண்டு போய் விட்டுட்டு... சரி சுருதி நான் கிளம்புறன்டி....சுருதி : ஆமா நானும் கிளம்புறன் விட்டுல தேட ஆரம்பிச்சிருவாங்க...ஓகே பாத்து போடி...சரி டா என்று கிளம்பிவிடுவாள்...குரு அன்புவிற்கு கால் பண்ணி டேய் எங்க இருக்கீங்க ஹோட்டல் க்கு வாங்க டா..அவன் டேய் நாங்க 1 மணிக்குலாம் வந்துட்டோம் டா நீ எங்க இருக்கா ??என்பான்..டேய் நான் உங்கள 1.30க்கு மேல தான வர சொன்ன...ஓகே வெயிட் பண்ணுங்க இந்த வந்துட்டு இருக்கன்... என்று ஹோட்டல்க்கு விரைவான்..அங்கே போய் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிடுவார்கள் சேது குருவை பார்த்து என்னட நீ சாப்பிடலைய என்பான் இல்ல மச்சி வயிறு சரி இல்ல இப்போ தான் சுருதி கூட ஜூஸ் குடிச்சான்.. நீங்க சாப்பிடுங்க.. அனைவரும் வெளுத்து கட்டினார்கள்...பில் வந்தது கரெக்ட் 1000 ரூபாய் வந்தது...கரெக்ட் சாப்புடு இருக்கீங்க மச்சி நானும்..என்று பேச ஆரம்பிக்கும்முன் கிருஷ்ணா டேய் ஒரு ஜூஸ் ஒன்னு சொல்லிருக்கு அதை சேகலன்னு நினைகன்..என்று கூறுவான்...டேய் எக்ஸ்ட்ரா காசு இல்லடா என்ன பண்ணன்னு குரு பதற ஆரம்பிதிடுவான்...டேய் அவன் சும்மா சொல்றான் நீ பே பண்ணிட்டு வான்னு விஜய் சொலுவான்..நிம்மதியுடன் பில் பே பண்ணி வெளியே வருவான் குரு ...
சேது : டேய் எல்லாரும் theatre க்கு போறோம் ஓகே யா..
அன்பு : டிக்கெட் காசு...
சேது: நான் ஆல்றடி புக் பன்னிடன் இது என்னோட ட்ரீட்..அனைவரும் theatre போய் படம் பார்த்து கொண்டாடினர்...படம் முடிந்த பின்பு எங்க போகலாம் எங்க போகலாம் என்று பிளான் பண்ணிட்டு இருந்தான் கிருஷ்ணா ...
விஜய் : டேய் பீச்க்கு போகலாம் இன்னைக்கு saturday அங்க ரேஸ் நடக்கும் அத போய் பாப்போம் என்று முடிவு எடுப்பார்கள்..
குரு : டேய் நான் என் தங்கச்சிய ஸ்கூல்ல போய் கூப்பிடனும் நீங்க போங்க நான் அவல விட்டுல விட்டுட்டு வாரேன் என்று சொல்லி கொண்டு கிளம்புவான் குரு...
ஓகே டா நீ விட்டுட்டு கிரௌண்ட் க்கு வந்துரு எலாரும் சேர்ந்து போகலாம்னு அன்பு சொல்லுவான்.... சரின்னு டாட்டா சொல்லிடு குரு கிளம்பிருவான்..பிரியா ஸ்கூல் வாசல்ல ரெடியா இருப்பா,,.. அவளுக்கு அண்ணன் நம்மல வண்டில கூட்டிட்டு போகபோறான்ன்னு சந்தோசமா இருக்கும்...குரு வந்து அவள கூட்டிட்டு போவான் அபோ அண்ணா வந்ததுக்கு தேங்க்ஸ் சொல்லுவாள்...எதுக்குடி தேங்க்ஸ்லா சொல்ற என கேட்ப்பான் ..சும்மா தான் என்பாள்..வீடு வந்ததும் குரு பிரியாவிடம் நான் பீச்க்கு போறான் அம்மாகிட்ட சொல்லிரு என்பான்..அவள் வீட்டுக்குள்ள வந்து சொல்லிடு போடான்னு சொல்லுவா..நீ சொல்லிருடி என்று சொல்லிவிட்டு க்ரௌண்ட்கு கிளம்பிருவான்...அங்க போய் தன் வண்டிய சேது கிட்ட கொடுத்து இந்த ஒட்டு மச்சி.என்று கிருஷ்ணாவிடம் கொடுப்பான்..கிருஷ்ணாவும் சந்தோசமாக நீ என் நண்பன்டா என்று சொல்லிவிட்டு பீச்க்கு கிளம்பிவார்கள்..குருவிற்கு தங்கச்சி ஆசைய நிரவேத்திடோம்ன்னு திர்ப்தியா இருக்கும்..பீச் ரோட்ல ரேஸ் நடந்துட்டு இருக்கும் அதை ப்ரிண்ட்ஸ் எல்லாரும் பாத்துட்டு இருப்பாங்க..அப்போ அந்த 1 st year மாணவன் வருவான்..குரு வண்டி வச்சி இருக்குறத பார்த்து..."வண்டி வந்கிடீங்களன்ன", என்பான்...ஆமா டா என்று குரு அவனுக்கு பதில் அளிப்பான்..அந்த மாணவன் குருவை ரேஸ்க்கு வாரீங்கள என்பான்..குரு முதலலில் யோசிப்பான்..சேதுவும்,விஜயும் அவங்க லவர் பேசிகிட்டு இருப்பாங்க..அன்பு,கிருஷ்ணா ரெண்டு பெரும் குரு பக்கதுல இருப்பாங்க...குரு சரி ரேஸ்க்கு வாரேன் என்று பதில் அளிப்பான்..ஓகேன்ன 6.30க்கு ரேஸ் வச்சிகிலாம்ன்னு சொல்லிட்டு கிளம்பிருவான்..
கிருஷ்ணா : டேய் இவன் தான அன்னைக்கு உன் கிட்ட சீன் போட்டன்... போட்டிக்கு போக போறியா?
குரு : ஆமா டா சின்ன பையன் மச்சி அவன என்கிட்ட வந்து சீன் போட்டான் இப்போ ரேஸ்க்கு வரீங்களான்னு assault ah வந்து கேக்குறான்..போலன்னா அசிங்கம்டா..
கிருஷ்ணா : பாத்துடா..
அன்பு : ஆல் தி பெஸ்ட் மாப்ள நீ தான் ஜெய்ப்ப..
குரு : தேங்க்ஸ் டா மாம்ஸ்..
பேசிக்கிட்டு இருக்கும் போது சேது வருவான்..டேய் என்ன டா ரேஸ்க்கு போக போறியா வண்டி வம்பா போயிரும் டா வேண்டாம்..
அன்பு :ஆமா மாப்ள வேண்டும் இபோ தான் வங்கி இருக்க..
குரு : டேய் இந்த ஒரு தடவதாண்ட அவன் மூஞ்சில கரிய புசிட்டு வந்துரன் அப்பறம் போக மாட்டன்..
சேது : சரி உன் விருப்பம்...
கிருஷ்ணா அங்கே நடந்து கொண்டு இருந்து ரேஸ் பார்த்து கொண்டு இருப்பான் அதில் அந்த முதலாம் ஆண்டு மாணவன் கலந்து இருப்பான்..அதில் அவன் அருமையாக ரேஸ் புரிவான்...உடனே கிருஷ்ணா குருவிடம் டேய் அவன் செமையா ரேஸ் பண்றான் பத்துக்கோ...
குரு : பாத்துகுலாம் டா...
என்று அங்கே நடந்து கொண்டு இருக்கும் போட்டிய பார்த்து கொண்டு இருப்பார்கள்.. .மணி 6.15 ஆனது குருவிற்கு அவன் அம்மாவிடம் இருந்து போன் வந்தது எடுத்து பேசினான்..
அம்மா : டேய் எங்க இருக்கா?? காலைல போனவன் ஒரு போன் பண்ணியாடா...பிரியா கிட்ட சொல்ல சொல்லி இருக்க..ஏன் நீ வந்து சொல்ல மாட்டியோ???இவரு பெரிய இவன் விடுகுள்ள வந்து சொல்லவேண்டித்தான...
குரு : அம்மா சாரிமா நான் பீச்ல தான் இருக்கன் விட்டுக்கு 8.30க்கு வந்துருவன்...சரியா..
அம்மா : சரிடா சீக்கிரம் வா அப்பா நைட் ஹோட்டல்க்கு போனும்னு சொல்லிறுக்காறு பாத்துக்கோ..
குரு :சரிமா என்று சொல்லி கொண்டு போனை வைத்து விடுவான்...
மணி நெருங்கி கொண்டே இருக்கும் 6.20க்கு சுருதி போன் போடுவாள்..
சுருதி:என்னடா எங்க இருக்க???
குரு : பீச்ல..என்ன பண்ற??
சுருதி: சும்மா தான் இருக்கன்..அம்மா வெளிய போயிருகாங்க அதான் போன் பண்ணன்..என்னவோ தெரியல உங்கிட்ட பேசணும்னு போல இருந்துச்சி அதான் கால் பண்ணன். ஐ லவ் u டா..காலைல நீ வேற ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிடனு சொன்னவுடனே எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சி..அழகையே வந்துருச்சி..
குரு : எனக்கு தெரியும் சுருதி அதான் உன்ன டக்குனு வெளிய வர சொன்னான்..சாரி சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னான் ஓகே யா..தப்பா நினச்சிக்காத...
சுருதி : ஓகே டா பாய் அப்பா ஆபீஸ்ல இருந்து வந்துடாங்கனு நினைகன் நான் நைட் கால் பண்றான்..
குரு : உன் அப்பாவுக்கு இதே வேலையா போச்சி....ஓகே டாட்டா டேக் கேர் டியர்..
சுருதி : மிஸ் யு டா என்று போனை வைத்துவிடுவாள்...
மணி 6.30ஆகும்,...அந்த பையன் அந்த ரேஸ் முடிச்சிட்டு வந்து அண்ணா வாங்க ரேஸ் வச்சிகிலம் ...பிரின்ட்லி ரேஸ் தான்...இந்த ரோட்ல 2 கிலோ மீட்டர்க்கு அடுத்து ஒரு திருப்பம் வரும் அதுல திரும்பி அடுத்து ரோட்ல இதே மாதிரி ஒரு 2 கிலோ மீட்டர் ரோட்ல உள்ள பினிஷ் ல யாரு முதல்ல வாரங்களோ அவங்க தான் வின்னர் ஓகே யா....
குரு : ஓகே...
ஸ்டார்டிங் லைன் பக்கதுல போய் ரெண்டு பேரும் நிப்பாங்க...கிருஷ்ணா போய் விஜைய ரேஸ் பாக்க வருமாறு அழைப்பான்..விஜய் உடனே போனை கட் பண்ணிட்டு..குரு ரேஸ் ல கலந்துகுரான..வா போய் பாக்கலாம்னு கிருஷ்ணாவை அழைத்து போவான்...அங்கே ரேஸ் துவங்கிவிடும் இருவரும் வண்டியை வேகமாக செலுத்துவார்கள் குரு அந்த மாணவனை முந்தி முன்னிலையில் செல்வான்...இந்த போட்டியை வீடியோ எடுத்து கொண்டு இருப்பான் சேது ...ரோடின்ன் திருப்பம் வரும் அதில் திரும்பி அடுத்த ரோட்டில் வேகமாக செல்வான் குரு...முதலாம் ஆண்டு மாணவனின் வண்டி திருபத்தில் நின்றுவிடம் அவனும் ஸ்டார்ட் பண்ணி பார்பான் ஸ்டார்ட் ஆகாது அதனால் குரு கொஞ்ச தூரம் சென்று முன்னிலையில் இருப்பான்..இதை பார்த்தா அன்பு வா மச்சான் வா வா என்று உற்சாக குரல் எழுப்புவான் குருவின் நண்பர்கள் தங்கள் நண்பன் ஜெயக்கபோவதை நினைத்து சந்தோசம் அடைவார்கள்...குரு வண்டி ஒட்டிக்கொண்டு இருக்கும் போது பின்னாடி திரும்பி பார்பான் முதலாம் ஆண்டு மாணவன் அங்கே நின்று இருப்பதை பார்த்தவுடன் தான் ஜெய்கபோறோம் என்ற சந்தோசத்தில் தன் இரண்டு கையையும் தூக்கி கொண்டு... "எஸ் எஸ் என்று சொல்லிக்கொண்டு இருப்பான்".... அப்போது ரோட்டின் நடுவில் இருக்கும் சின்ன ஆனா கொஞ்சம் ஆழமான பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறிவிடும் அதனால் வண்டி கட்டுபட்டை இழந்து தாறுமாறாக ஓட ஆரம்பிக்கும் ....உடனே தன் கையை ஹன்பேர்ல வைத்து வண்டியை சிராக ஓட்ட முயற்சிப்பான் ஆனால் வண்டி வேகமாக செல்வதால் அவனால் கண்ட்ரோல் செய்ய முடியமால் டக் என்று டிஸ்க் brake பிடிப்பான்... வந்த வேகத்தில் பிடித்ததால் அவனை தூக்கி வீசி சாலை ஓரத்தில் கிடப்பான்..வண்டி சுக்குநூறாக நொறுங்கி விடம்..குரு விழுவதை பார்த்த நண்பர்கள் குரு என்று ஓடி வருவார்கள்..அவன் தன் நண்பர்கள் ஓடி வருவதை பார்த்து கொண்டே மயங்கிருவான் ... உடனே அந்த வழியாக வந்த ஆட்டோவை கிருஷ்ணா நிறுத்துவான் அதில் குருவை தூக்கி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்வர்கள் ஆட்டோவில் குருவுடன் சேதுவும்,அன்பும் போவார்கள்..சேது குருவை தட்டி எழுப்ப பார்ப்பான்..குரு எழாமல் இருப்பதை பார்த்த அன்புக்கு கண்ணீர் வந்துவிடும்..கிருஷ்ணாவின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் டாக்டர் என்பதால் அவருக்கு போன் போட்டு நடந்ததை கூறி அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்மாறு கூறுவான்..மருத்துவமனை வந்தவுடன் குருவை வேகமாக ஸ்ட்ரேசரஇல் படுக்க வைத்து வேகமா அவசர பிரிவு பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்...கிருஷ்ணாவின் தந்தை அங்கே குருவிற்கு சிகிச்சை அளிக்க வருவார் ..அவரிடம் சேது அங்கிள் எப்படியாவது அவன காப்பதிருங்க அங்கிள் என்று கெஞ்சுவான்..அவரும் சரிபா என்று அறைக்குள் செல்வார்...
கிருஷ்ணா : டேய் பயப்படதீங்க அவனுக்கு ஏதும் ஆகாதுன்னு...மனதிற்குள் அழுதுக் கொண்டே மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவான்...குருவின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்படும் அவர் அம்மா மற்றும் தங்கையுடன் மருத்துவமனைக்கு விரைவார்கள்..குருவின் அம்மா அழுது கொண்டே இருப்பார்கள் எப்படி சமாதனம் செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருப்பார்கள் குருவின் நண்பர்கள். . டாக்டர் ரொம்ப நேரம் கழித்து வெளியே வருவார் குருவின் அப்பா மற்றும் நண்பர்கள் ஆவலுடன்....டாக்டர் என்னாச்சி எப்படி இருக்கிறான் என்பார்கள்...
டாக்டர் : குருவின் தந்தையை பார்த்து..சார் சாரி நாங்க எவளவோ ட்ரை பண்ணோம் அனா எங்களால அவன காப்பாத்த முடியல..மருத்துவமனைக்கு வந்ததும் அவன் காதல் இருந்து ரத்தம் வந்துட்டு.. இருந்தாலும் ட்ரை பண்ணோம் பட் முடியல..சாரி...
குருவின் அப்பா டாக்டர் சொன்னதை கேட்டு அழ ஆரம்பித்துவிட்டார்...அவர் அழுவதை பார்த்த தங்கைக்கும் அம்மாவிற்கு புரிந்து விடம் குரு இறந்து விட்டான் என்று...அவர்களும் ஐயோ என் மகன் என்ன விட்டுட்டு போய்ட்டான்ன என ஏங்கி ஏங்கி அழுவார்கள்...டாக்டர் குருவின் தந்தைக்கு ஆறுதல் தெரிவித்து கிருஷ்ணாவிடம் டேய் அவங்கள பாத்துகோங்க டா என்று கூறிவிட்டு கிளம்பிடுவார்..கிருஷ்ணா தன் நண்பன் இறந்ததை தங்க முடியாமல் அழ ஆரம்பித்து விடுவான் அவனை பார்த்து மற்ற நண்பர்களும் அழ ஆரம்பித்துவிடுவார்கள் ....விஷயம் விஜயின் காதலி வழியாக ஸ்ருதிக்கு தெரியவரும் கேட்டவுடன் அதிர்ச்சியில் மயங்கி விளுந்துருவாள் அவள் விட்டில் அவள் விழுவதை பார்த்து எழுப்புவார்கள் ஆனால் அவள் எழுந்திரிக்கமாட்டாள் அவளை உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்வார்கள்... மருத்துமனை பார்மாலிடீஸ் லா முடிந்தவுடன் குருவின் உடலை அவனின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க பட்டது...குருவின் உடலை பார்த்து அனைவரும் அழுதனர்...குருவின் அம்மா வீட்டுக்கு 8.30 மணிகளும் வந்துரனு சொன்னியபா இப்படி 8.30 மணிக்கு எங்க எல்லாத்தையும் விட்டுட்டு போயடியப்பா என்று தன் தலையில் அடித்து அழுவார்கள்..அவனுடன் பயிலும் அணைத்து நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்து விடுவார்கள்...
குரு இறந்து விட்டான் அவன் பிறந்தநாள் அன்றே அவனுடைய இறந்தநாளும் முடிவானது....அவனுடைய கனவு நிறைவேறி ஒரு நாள் மற்றும் நீடித்து ரொம்ப நாட்கள் நீடிக்காமல் போய்விட்டது....அவனுடைய இந்த ஒரு நாளில் ஒரு கனவு முடிவடைந்தது....
.....தொடரும்....