வன்முறை ஏன் - நாகூர் லெத்தீப்

இரத்தம்
சிந்தும் மனித
வன்முறைகளின்
அரங்கேற்றம்........!

தொடர்
தாக்குதல்கள்
மனிதனை
இனம் பிரித்து
மனிதனே
சாகடிக்கிறானே......!

நேற்று கண்ட
வாழ்க்கை
கனவாக
தெரிந்தது உயிர்
சென்றது........!

உயிரை
பறிக்கும் எமன்
வானிலிருந்து
வருகிறான்
விரைவாக........!

என்றுதான்
மாறும் இந்த
மானிட
வேற்றுமை
தெரியவில்லையே......!

யுத்தம்
மனிதன் கண்டடுத்த
அற்புத
சித்தம்
சிதைவதற்கு......!

இங்கு
மனிதர்கள்
வாழ்ந்தார்கள்
ஒருகாலம்
சொல்லும்
நேரம் வருமே........!

மனிதன்
மனிதனே
வன்முறை
செய்துகொண்டான்
மாண்டான்........!

எதற்கு இந்த
இன வெறி
மனிதனே
கண்டுபிடித்த
அழிவு நிதி........!

தொர்ப்பதும்
வெற்றி அடைவதும்
நீ அல்ல
உனது இனமே........!

அமைதியை
விரும்பும் மனிதன்
மனித உயிரை
அமைதி
படுத்துகின்றானே.......!

கொடுமைகள்
நடக்கிறது
அப்பாவி மக்களின்
உயிர்
பிரிகிறது.......!

கொண்டு
செல்வதற்கு
ஒன்று இல்லை
கொண்டு
வந்ததும் ஒன்றும்
இல்லை.......!

மனிதனோ
அடித்துகொள்கின்றான்
வன்முறை
செய்கிறான்
எனது
தேசம் என்று......!

ஒற்றுமை
மனித வர்க்கம்
வன்முறை
இல்லாத சொர்க்கம்......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (12-Jul-14, 3:20 pm)
பார்வை : 293

மேலே