தூறல்கள்
எந்தன்
நேசமே.....
என்
பாசமே
என்னோடு
வாழவா.....
உன்னோடு
வாழ்ந்து
நான்
வாழ்க்கையை
ரசிக்கப்
போகிறேன்....
மகிழ்ச்சியை
அள்ளித்
தரும்
அளவில்லாத
வெள்ளிக்
கிண்ணமா
உன் மனம்...?
உனைத்
தேடாத
நாளில்லை....
நீயின்றி
எனக்கு
ஓய்வுமில்லை....
செல்லம்
செல்லம்
என்று
கொஞ்சிக்
கொஞ்சியே
தொலைபேசிக்
காதல்
தொலைத்தே
நம்
காலங்களை....
நம்
காதலை
அல்ல.....
மலரோடு
பேசினேன்
அவள்
மௌனமாய்
மலர்ந்தாள்....
சத்தமின்றி
போனாள்
சுத்தமாய்
எனை
மறக்கச்
செய்து....