சிருஷ்டி
என் பிறப்பு
படைப்பு எனும் கலையால்
ஆசீர்வதிக்கப்பட்டது
எனது சொர்க்கத்தை
தாயின் மடியில்
தந்தாய்
எனது உறக்கம்
கனவுகளால் அலங்கரிக்கப்படுகிறது
நான் சிங்காரித்த கனவுகள்
காதலால் ஆசீர்வதிக்கப்படுகின்றன
என் திருமண நாளில்
குடும்பம் எனும் கோயிலால்
ஆசீர்வதிக்கப்பட்டேன்
வசந்தம் எனக்கு
பூக்களையும்
விரக்தி எனக்கு
சூனியத்தையும் பரிசளித்தது
என் வாழ்க்கை
மரணத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறது
உன் ஒவ்வொரு அசைவும்
ஆசியே...! (1997)
(எமது ' கடவுளின் நிழல்கள் ' நூலிலிருந்து)