கற்றவை பற்றவை - கார்த்திக்

கற்றவை யாவும்-பெரும்
பொய்யென்று

அனுபவ ஆசான் -அறிவுரை
செய்வான்

அக்குறிப்பினை ஏற்று
நற்குருவை நாடு

குருவின் அருளால்
குற்றம் தொலைத்திடு

புருவ மத்தியில்
எண்ணத்தை புகுத்திடு

பித்தமும் தீரும் -பெரும்
பகை மாழும்

அஞ்சிடும் மனமே -இனி
அஞ்சாது வாழ்வாய்

சத்தமின்றி தவம்தனை
செய்வாய் தினமும்

அனுதின வாழ்வே
அறமாய் மாறும்

மாறிடும் இடம்தனில்
அமைதி ஓங்கிடும்

அமைதி ஓங்கிட
அன்பு பெருகிடும்

அன்பு பெருகிட
அகிலம் செழித்திடும்

பிறப்பும் இறப்பும்
ஒன்றாய் மாறிடும்

ஒன்றாய் மாறும்
குறிப்புணர்ந்த பின்

பற்றிய அனைத்தும்
அறுந்து எரியுமே !!!

*************************************

அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (13-Jul-14, 8:36 pm)
பார்வை : 90

மேலே