படிக்க நினைக்கும் ஏழை குழந்தையின் ஆசைகள்
(படிக்க நினைக்கும் ஏழை குழந்தையின் ஆசைகள்)
காலத்தின் ஓடையில் ஓயாமல் நடந்து
காகிதகுப்பை சுமந்து ஓர் தொலைதூர பயணம்..
தோளின் மீது கோணிப்பை தூக்கி
பள்ளியறை வாசல் செல்வோம்
ஓரமாய் நின்று
தினமும் பாடம் கேட்போம்
பாதையில் காகிதம் பொறுக்கியே
நாங்கள் கணிதம் கற்போம்
இப்படி வாழ்கை
பாடம் தினமும் கற்போம்...
பள்ளியறை போக சொல்ல
பெற்றவர்கள் இல்லையென்று
மற்றவர்கள் மிரட்டியே
குப்பை தொட்டி தாய் ஆச்சு.- அதில்
குறுகிய இடமும் அழகான விடாச்சு
எங்கள் வாழ்கை..............இது தானே.
எச்சில் இலை தொட்டியோரம்
எங்கள் மனம் குப்பைத் தேடும்
பொறுக்கிய காகிதங்கள்
எல்லாமே எங்கள் கோணிப்பையில் இனி நசுங்கிவாடும்
உன்மையில் நசுங்கியவர்கள்
நாங்கள் தானே.
பள்ளியறை அழைத்து சென்றால்
பாரதமும் நாளை
உதவிய பெயர் சொல்லும்
அழைத்து செல்ல
வருவாரா.................யாரேனும் இனி
படிக்க சொல்லி தருவாரா....??
(கோ...எழிலன்)