எழுச்சிக்கண் என்ன செய்யலாகாது - ஆசாரக் கோவை 58

எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ வென்னாரே முன்புக்
கெதிர்முகமா நின்று முரையா ரிருசார்வுங்
கொள்வர் குரவர் வலம். 58 ஆசாரக் கோவை

பொருளுரை:

ஒருவர் எழுந்து போகும் பொழுது பின்னே நின்று அழைக்கக் கூடாது.
தும்மக் கூடாது. மறந்தும் எங்கு நோக்கிப் போகின்றீர் என்று கேட்கக் கூடாது.
அவர் முன் சென்று எதிர்முகமாக நின்றுகொண்டு ஒன்றையும் சொல்லக் கூடாது.

அவர்க்கு இருபுறத்திலும் நின்று பேசலாம். நாம் போகும்போது
அப்பெரியாரை வலஞ் செய்து போக வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-14, 8:25 am)
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே