பதட்டம்

நாம் எங்கே நம் நாடு எங்கே
கட்டிய பங்கர் குழிகளில்
பதுங்கிய காட்சிகள்

ஈழத் தமிழனால் மறக்கவும் கூடுமா
குண்டு மழை பொழியும் பொது
உயிர் காக்க உறவுகள்

பதுங்கிய இடங்கள் பதுங்கு குழிகள்
அந்தக் குழிகளுக்குள் சில சமயம் பாம்புகளும்
நுழைந்திருக்குமாம் இதனையும்

பொருட்படுத்தாது பதுங்கி விட்டால்
அவர்களின் நிலை என்ன
தமிழனே சிந்தியுங்கள்

அதையும் தாண்டி அந்நிய
மனித மிருகங்களின் கையில்
அகப்பட்டு விட்டால் கதி என்ன

இன்னும் எத்தனையோ இன்னல்கள்
அனுபவித்தான் தமிழன்
நம்மால் உணர முடிகிறதா

இல்லவே இல்லை ,சொல்வதைக் கேட்கிறோம்
தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்
எல்லாமே பயங்கரக் காட்சிகள்

இவை எல்லாம் மறந்து போகிறது
நமக்கு நாமே என்றுதான்
இருக்கமுடியும் தவிர , வேறு இல்லை

எழுதியவர் : பாத்திமா மலர் பதுங்கு கு (15-Jul-14, 6:16 pm)
Tanglish : padhattam
பார்வை : 257

மேலே