பெற்றெடுத்த உனக்கு நாளை
பாமரரும் ,கிராமத்தாரும்,
பண்பு மாறவில்லை,
மனசு மறக்கவில்லை,
மறந்தும் செய்யவில்லை.
படித்தவரும்,பட்டினவாசியும்,
அவசியமென நினைக்கின்றார்.
பெருமையோடு செய்கின்றார்.
தன் வசதி மட்டும் கருதி,
தாய் தந்தை வயது காட்டி,
தள்ளாடும், தடுமாறும், காலத்தில்
பெற்றோரை,
முதியோர் இல்லங்களில்
அடைகின்றார் .
பணம் மட்டும் கட்டி விட்டால்
பாசம் என்ன ,
கடைச் சரக்கா வாங்கிவிட!
ஏங்குது உள்ளம்,
எதிர்பார்ப்பது ஒரு வார்த்தை.
கொஞ்ச நினைப்பது,
பேரப்பிள்ளைகளை.
உயிர் கொடுத்து,
கல்வி கொடுத்து,
உடனிருந்து உயர்த்தியது,
உன் பெற்றோர்.
உண்மை தெரிந்தும்,
உயர்வு அறியவில்லை.
பெற்றோருக்கு இன்று ,
பெற்றெடுத்த உனக்கு நாளை .
உன் பிள்ளை உடனிருந்து
கவனிக்கிறான் உன்னை.