திட்டினால்
வெட்ட வெட்ட
மரம் தளிர்விடும்
திட்ட திட்ட
மனம் மிளிர்விடும்
கழுதை என்று திட்டினால்
கவலைபடாதே!
பொதிசுமக்க உதவும்!
எருமை என்று ஏளனம் செய்தால்
பொறுமை என்று நினைத்துகொள்
மண்ணாங்கட்டி என்று திட்டினால்
மனம் தளராதே
விவசாயம் செய்ய உதவும்
போடா வெங்காயம் என்று திட்டினால்
பொங்கி எழாதே!
அது உயிரைக்காக்கும்