வீட்டிற்கொரு ஆச்சிக்கிழவி
வெற்றிலைப்பெட்டியும் ,சுருக்குப்பையும்
முந்தானையில் முடிந்த வீட்டுத் திறவலும்
நரைத்த கூந்தலும் ,வறண்ட மேனியுமாய்
வளம் வருபவள் நமக்குப் பாட்டியாய்
பள்ளி கிளம்பையில் படியாத முடியதைப்
படிய வைத்து பக்குவமாய் தலைசீவி
ஐயா ராசா என அன்பார உணவூட்டி
பேரக் குழந்தை என்னை கூட்டிச்சென்று
பகல் மணி ஒன்றிற்குள் பள்ளிக்கு ஓடிவந்து
மதிய உணவதை வாய்நிறைய ஊட்டிவிட்டு
செலவுக்கு எட்டணா எடுத்துக் கொடுத்துவிட்டு
மாலை நான் வரும்வரை உணர்வை
எனக்குத் துணையாக்கிவிட்டு
பண்ணையில் பால் வாங்கி வந்ததும்
தேநீரிட்டு எனக்கான ரோட்டாவில்
எடுத்துவைத்து காத்திருக்கும் உனக்கான
பாசக் கவி இது ,,,
"நீ இல்லை எங்களுடன்
இருக்கிறாய் தெய்வங்களுடன்"
பாசத்திற்கு இலக்கணமாய்
வேண்டும் வீட்டிற்கொரு ஆச்சிக்கிழவி ,,,,,,