ஆராதனை
அதிகாலைப் பொழுதில்
ஆதவனுக்கு ஆராதனை
ஆகாய வீதியில்
நிலவுக்கு ஆராதனை
அருள் ஆலயத்தில்
ஆண்டவனுக்கு ஆராதனை
மலர் தோட்டத்தில்
தென்றலின் ஆராதனை
மனத் தோட்டத்தில்
காதலுக்கு ஆராதனை
இளவேனில் காலத்தில்
குயிலின் குரல் ஆராதனை
வான் முகிலுக்கு
வண்ண மயில் ஆராதனை
அரசியலிலோ
பொய்களின் ஆராதனை
பொய்களுக்கோ பூமி எங்கும் ஆராதனை
போர் வெறி நாடுகளில்
சாவுக்கு ஆராதனை
வேதனைக்கெல்லாம்
வித விதமான ஆராதனை
போரில்லாத
உலகம் செய்வோம்
பொய்யற்ற சத்திய வீதி சமைப்போம்
சமதர்மத்திற்கு ஆங்கே
ஓர் ஆலயம் அமைப்போம்
மானுடத்தை அதில் வாழவைப்போம் !
~~~கல்பனா பாரதி~~~