உன் பார்வை ஒன்றே போதும்

உயிரை
எடுக்க யமன் வருவான்
பாசகயிராய் எறிவான்
என்றெல்லாம் கேள்வி
பட்டிருக்கிறேன் ....!!!

மங்கை உன் கண்னை
பார்த்தபின் தான்
உணர்ந்தேன் என்னை
கொல்ல யமன்
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!


குறள் - 1083

தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

எழுதியவர் : கே இனியவன் (17-Jul-14, 12:55 pm)
பார்வை : 209

மேலே