பூக்களோடு கைகுலுக்கல்

புதிர் தேடும்
மலை உச்சியில்
மழையான கதை
எனது....

காற்றான புதிர்
கிடைக்க,
சிறுகதையின் விதை
மனது...

சந்தம் தொலைத்த
வரிகளின்
தீரா தாகத்தில்
மதம் பிடித்த
காற்றாட்டின் திசை
படிக்கும் விசை , கனவு....

மௌனமொழி
புதுக்கவிதை என்றான
பொழுதுகளில்
நான் எதையோ
இழந்தே சிரிப்பதான
மரபு....

எனது சிரிப்பெங்கும்
புதை பொருள்
ஆராய்ச்சி செய்வது
எனக் கடந்தவளின்
கொலுசொலியின் தளர்வு....

வந்து தீரும், தீரா பாதையில்
வரவே இல்லாமல்
போவது, போனதும்
வரலாம் என்ற
எனது
பின்னோக்கிய முன் நடை....

முற்போக்கின் பக்குவம்
படைப்பதான
சிறு குரங்கின்
சாயலை, எனதாசை
தீ வைத்தே பரப்புகிறது....

கண் பேசும்
கதகளியில் கவியான
கிறுக்கல்கள், மண் தேடும்
சிறு புழுவின் மீதான
யுத்தங்கள்....

மிச்சங்கள் எதுவெது
உச்சங்கள் கடக்கையில்
அச்சங்கள் பிறிதொன்றாய்
கவிதை வாசிக்கும் போட்டி
எனைப்பாட
வந்தேன் நானாக
அல்லாமல்,
பூக்களோடு கைகுலுக்கும்
புதுப் பிறவியின்
புதுக்கவிதை தாளாக......

பூக்களோடு கைகுலுக்கல்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Jul-14, 9:25 pm)
பார்வை : 220

மேலே