நகராத சக்கரங்களாய்

பேருந்து பயணமும்
பள்ளிக்கூடம் போலவே
நுழைகையில் கசக்கிறது
பிரிகையில் வலிக்கிறது
பயணங்களில் கூடவே
ஓடிவரும் மரங்களெல்லாம்
வரவேற்கிறதா ?
விடைகொடுக்கிறதா ? கைகளை அசைத்தபடி....
புரியாமல் விழிக்கிறது
விழிகளோடு சேர்ந்து சன்னல்களும் .....
கடந்துபோகும் பேருந்துகளைப்போல
எளிதில்
கடந்துபோவதே இல்லை எதுவும்
பார்த்துக்கொண்டிருக்கும்
குழந்தைகளின்
கனவுகளும் ஏக்கங்களும் ........!!!!
கவிதாயினி நிலாபாரதி