வார்த்தைகளில் தொலைந்த மௌனம் நான்

மௌனம் என்பது வார்த்தையில்லா புத்தகம்
ஆனால் வாசிப்பதற்கு ஏராளமாய்..
மௌனம் என்பது வெளிச்சம்
நம்மை நாமே தரிசிக்கலாம்...

மௌனம் என்பது இருட்டு
அனைத்து கர்வங்களையும் புதைக்கலாம்...
மௌனம் என்பது மூடி
அனைத்து ரகசியங்களையும் மூடலாம்...

மௌனம் என்பது போதிமரம்
உலகு சொல்லா உண்மை உணரலாம்..
மௌனம் என்பது தவம்
ஆழ்ந்தால் அமைதியில் ஆழலாம்...

மௌனம் என்பது வரம்
நம்மிடமிருந்து நாமே பெறலாம்...
மௌனம் என்பது உறை
பேச்சு என்பது வாள்...

மௌனம் என்பது சொர்க்கம்
இயல்பை எதிர்த்தால் நரகம்...
மௌனம் என்பது ஒற்றுமை
வார்த்தை என்பது வேறுபாடு...

மௌனம் என்பது கருவி
எனக்கு அதுவல்ல குறிக்கோள்
உணர்ந்துவிட்டேன் உறுதிபட..

இன்பம் துன்பம் இயல்பாய் பற்றிட
இரண்டையுமே கைக்கொள்கிறேன்..
முடிவிலா மௌனதொடும்
முடிவுறும் வார்த்தைகளோடும்..

மௌனமதே விளைவு எனினும்
அவ்வப்போது தெறித்துவிடுகிறேன் வார்த்தைகளாய்..

தெளிந்த பின்னே தேடுகிறேன்
தெரித்தேரிந்த மௌனங்களை...

சில சமயம் கோர்த்தும் விடுகிறேன்!
பல சமயம் தோற்றும் விடுகிறேன்!

தோற்றும் தொலைந்தும்
தேடிக்கொண்டிருப்பேன்
ஏனெனில்
வார்த்தைகளில் தொலைந்த மௌனம் நான்....!

எழுதியவர் : என் இனிய நண்பன்.. (18-Jul-14, 11:49 am)
சேர்த்தது : Mahalakshmi
பார்வை : 73

மேலே