காத்திருப்ேபன்

காத்திருப்பதும்
ஒரு வகை சுகம்தான்்
அதுவும்
உனக்காக என்றால்
தனி சுகம்தான்!்
்நீ நேரத்திற்க்கு
வந்ததில்லை
என்று தெரிந்தும்
்நேரத்திலே வந்து
காத்திருப்பேன்!்
்அழுத விழியோடு
அலையின் கரையில் காத்திருப்பேன்!்
காலம்
காத்திராதெனினும்்
நாணலாய் நான்
காத்திருப்பேன்!்
்நித்திரை துறந்தேனும்
்நினைவுகளில் வாடிக் காத்திருப்பேன்்!்
சொந்தக் கனவைச் சேர்த்துசொல்ல வழியின்றிக் காத்திருப்பேன்!்
்என்றேனும் வந்துவிடுவாய் எனவழி பார்த்துக்
காத்திருப்பேன்்!்
மறுபிறவி உண்டெனில்
்உன் மடிசாயக்
காத்திருப்பேன்!்
காத்திருப்பேன்
உன்னோடு வாழ!
காத்திருப்பேன்
உனக்காக வாழ‌!

எழுதியவர் : பழனிவேல் (18-Jul-14, 11:12 am)
பார்வை : 76

மேலே