மங்கை உன் நினைவாலே
வேதனைகள் வேர்விட்டு
வேர்த்தது என் நெஞ்சமடி!
பூவுலகில் உன் துணையின்றி
பாவிமனம் புலம்புதடி!
உடல் நோயும் தீருமடி!
உன் நினைவு நோய் முற்றுதடி!
ஆவி கொண்டு அலையும் உடலை
நோய் கொண்டு போகும் முன்
மங்கை உன் நினைவாலே - நித்தம்
மரணம் எனைத் தழுவுதடி!