என் உயிரினுள் ஒரு ஓவியம்
உன் உருவில் ஓவியம் படைக்க
பலமுறை முயற்சித்தேன்,
என் பார்வைக்குள்ளே
வந்துச் சென்ற உன் உருவம்
என் கலைகளில் வரத்
வருத்தம் கொண்டது.
வர்ணங்களாய் உனைப் படைக்க - பலத்
தருணங்களில் யோசித்தேன்.
பக்கத்தில் நீ இருந்தும்
பலனின்றி போனதடி!
வரைய முடியாமல்
வருந்தி நானும் நிற்கையிலே,
வருந்திய என் மனதிற்கு
பொருந்திய ஆறுதலாய்,
உன் உதட்டுச் சாயத்தை
என் கையில் கொடுத்து
உன் அழகிய இதழுக்கு சாயம் பூச
மென்மையாய் கூறி
பெண்மையாய் எனக்குள்ளே - நீயும்
உண்மையாய் பதிந்து விட்டாயடி!
எனக்குள்ளே பதிந்த உன்னைத்
திரட்டி எடுத்து
என் நரம்புகளை தூரிகையாக்கி
உதிரத்தை வர்ணங்களாக்கி
என் உயிரினுள் உயிராய்
உனை வரைந்தேன் ஓவியமாய்!..........