வடேபாச்ேச
![](https://eluthu.com/images/loading.gif)
“என்னடா பேசுற நீ? உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்வதா நாங்க சின்ன வயசிலேயே முடிவு செய்த விஷயம். உனக்கு இது தெரியாதா என்ன?”“வனஜா நீ அமைதியா இரு, சொல்லு கபிலா, ஏன் நிஷாந்தியை உனக்குபிடிக்கலை? நல்ல பொண்ணு, ரொம்ப மரியாதை தெரிந்தவள், நல்ல குணம், நல்லா படிச்சிருக்கா, நல்ல குடும்பம்”“நீங்க சொன்னது எல்லாம் சரி தான் அப்பா, ஆனால் அழகு? எனக்கு அழகான பொண்ணு தான் மனைவியா வரணும்”ஆறு வருடங்களுக்கு பிறகுகபிலனின் மகனின் பள்ளி ஆண்டுவிழாவிற்கு சென்றவர்கள், அங்கே நிஷாந்தியை கண்டு ஆச்சர்யப் பட்டார்கள். திருமண பேச்சு தடைபட்ட பின் இரண்டு குடும்பங்குளுக்கும் இடையில் சிறிது இடைவெளி ஏற்பட்டு தொடர்பு விட்டு போயிருந்தது.“என் பொண்ணு இங்கே தான் படிக்குறா அங்கிள்”எந்த வித மாறுதலும் இல்லாது எப்போதும் போல் வெகு இயல்பாக பேசினாள் அவள். அவளின் கணவன் முகுந்தனையும் அவனின் பெற்றோரையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள்.விழாவில் அந்த ஆண்டில் சிறந்த படிப்பு, விளையாட்டு என பல துறைகளுக்கான பரிசுகளை நிஷாந்தியின் மகள் அக்ஷிதா பெற்று இருந்தாள்.“அக்ஷிதா ரொம்ப சமர்த்து போல இருக்கே”“எல்லாம் நிஷாவால தாங்க” என்று வனஜாவிற்கு பதில் சொன்னான் முகுந்தன்.“அதெல்லாம் இல்லை ஆன்ட்டி எல்லாம் அவளுடைய திறமை”“அக்ஷிதா ரொம்ப சுட்டி, ஆனால் அது மட்டும் போதாதே, அந்த திறமையை வளர்க்கவும் ஒருத்தர் வேணுமே. முகுந்தன் சொல்வது சரி தான். என் மருமகள் போல ஒருத்தி இருந்தா வேற என்ன வேண்டும். எங்க குடும்பத்தின் குத்து விளக்கு அவள்.”அவர்களின் பேச்சில் சங்கோஜப்பட்ட போதும், நிஷாந்தியின் முகம் பெருமையில் அழகுடன் மின்னியது.சற்றே பொறாமையுடன் அதை பார்த்து விட்டு, அருகில் மேக்கப்புடன் அழகு பதுமையாக நின்றிருந்த தன் மனைவியை பார்த்தான் கபிலன். தன்னுடைய அழகு குலைந்துவிடும் என்று தாய் பால் தரவும் மறுத்தவளை பற்றி என்ன நினைப்பது?அழிந்துப் போகும் அழகிற்காக மட்டுமே மனைவியை தேர்ந்து எடுத்தவன் என்ன செய்ய முடியும்?