வளர்சிதை மாற்றம்

யுகப் பெருவெளியில்
நட்டு வைத்த நிமிடங்கள்
வருட விருட்சங்களென
நான் கடித்துத் துப்பிய
நகங்களாய்-
மறுமுளைப்பில்
திரும்பவும்
வெட்ட வெட்ட வளருகிறது
ஊசி முனையாய்
நினைவு நகம்
முகம் கிழிக்க ...
உனக்கான விடியல்களின்
ஒவ்வொரு காத்திருப்பிலும்
நாளைகளின்
உன் விருப்பதிற்கேற்ப
உருமாறி உருமாறி தோலுரிக்கின்ற
என் வளர்சிதை மாற்றத்தில்
என்றும் போல் இன்றும்
உன் கிழக்கிலும் மேற்க்கிலுமான
எனது சூரிய பயணம்
வியர்வையின் பிசு பிசுப்புகளினூடே
உன்னுடைய
சந்திப்புகளற்ற பொழுதுகளில்
கரைந்து
ஒரு விடியலோடும் முடிவோடும்
துயில் கொள்ள மறுத்து
விடியலின் வாசலில்
உதிர்ந்து கிடக்கிறது -
வைக்கையில் பசுமையாயும்
வறண்ட பின் கருமையாயும்
போய் விடுகிற
பழைய மருதாணியைப் போல .