காதல் வலை
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் வலை வீசுவோர்
கைதேர்ந்த ஞானிகள்
ஏமாளி நபர்களை
வீச்சொன்றில் வீழ்த்திடுவார்
விழுந்தவரில் ஒருசிலரே
தப்பித்துப் போய்விடுவார்
மாட்டியவர் சரணாகதி
இறுதிவரை அவரின்நிலை
வலைவீசிப் பிடித்தவர்
நல்லவராய் இருந்தால்
விழுந்தவர்க்கும் நன்று
பறிகொடுத்தவர்க்கும் கேடில்லை
வென்றவர் தீயவரெனில்
பலிகிடாவின் உறவினருக்கு
காலமெல்லாம் பெருந்தொல்லை
அனுபவம்தான் பேசுதிங்கே
விழுந்தவன் நானல்ல
உடன்பிறப்பு ஒன்றுதான்
மெய்மறந்து போனது
உறவும் அறுந்து
வலையோடு மறைந்தது.