என் காதல் நீயே
உன் விழிகளை கண்டே
என் இதயமும் உயிர்க்கிறது..
உன் மவுனத்தில் ஏனோ
என் மனதும் சாகிறது..!
நீ சிரித்திட புகுவேன்
சொர்க்க வாசலில்..
நீ மொழிந்திட நனைவேன்
இன்ப சாரலில்..!
உன் நினைவுகள் மூச்சாய்
என்னுயிரில் கலந்ததே..
என் கனவுகள் உன்னால்
வாழ்ந்திட நிஜமானதே..!
உன் அன்பினுள் தஞ்சமாகி
என்னில் நம்காதல் சுமக்கிறேன்..
உன்தேவை உணர்ந்தே உன்னை
முதல்குழந்தையாய் வளர்க்கிறேன்..!
அதிகம் காதலிக்கிறேன்
என்னில் யாவுமாய் உன்னை..
அதிகம் வெறுத்திடுவேன்
உன்னை பிரிந்தால் என்னை..!
...கவிபாரதி...