சரியாதவறா

ஒரு வருசம் காத்திருந்து
ஒத்த மக பெத்தெடுத்தே
ஒத்த மக பெறந்த பின்னே
ஒரு புள்ளையும் நிக்கலையே
ஒருத்தியா இருந்த மக
ஒத்தையா ஆனாலே
ஒத்தையா இருந்த மகள
ஒத்தையில விட துணிஞ்சே
ஒத்த மக பெத்தெடுத்து
ஒத்தையில விடுறியே
ஒனக்கென்ன பைத்தியமான்னு
ஒறவெல்லாம் ஏசுது
ஓயாம பழிக்குது
ஒருத்தரையும் கேக்காம
ரயிலேறி பொறப்பட்டே
போற எடம் தெரியுது
போற பாத தெரியலையே
சரியா?தவறா?

எழுதியவர் : விநோயோகி (22-Jul-14, 7:33 pm)
சேர்த்தது : Vinotha
பார்வை : 80

மேலே