தாய்மை
 
 
            	    
                தாய்மை 
பெண்ணினம் 
மட்டுமே 
வாங்கிய 
வரம்..........
ஆயிரம் கோடி 
அள்ளிக்கொடுத்தாலும் 
ஆணினம் அமர முடியா 
அழகிய சிம்மாசனம்..........
உலகையே 
படைத்தாலும் 
பிரம்மனும் பெறமுடியா 
பேரின்ப பெருவெள்ளம்..... 
அளவுக்கு அதிகமாக 
சிறிதளவு உண்டாலும் 
செரிக்காமல் தவிக்கும் 
சிறிய வயிறு......
உயிரையே வளரச்செய்யும்
உன்னத உலக அதிசயம்......
என்னதான் 
குழந்தையாய் தவழ்ந்தாலும்,
குமரியாய் மலர்ந்தாலும்,
மணமகளாய் ஜொலித்தாலும்,
தாய்மை தானே முழுமை!
தாய்மை தானே தன்னிறைவு! 
வலி கொடுத்து,
குருதி குடித்து,
தூக்கம் கெடுத்து,
உடல் கிழித்து,
பிறந்தாலும் 
பிள்ளைக்கொரு வலியென்றால் 
துடிக்கிறது தாய்மை............
உயிர் கொடுக்கும் 
வலி கூட
சுகம் தானோ பெண்மைக்கு!
அடுக்கடுக்காய் 
மாடி வீடு 
அழகாகக் 
கட்டினாலும் 
நாம் உதித்த 
சொர்க்கமான 
கருவறை போல் 
ஒன்றுண்டோ! 
பத்து நிமிடம் 
சுமை சுமந்தால் 
சோர்வடைந்து 
கை வலிக்கும்,
பத்து மாதம் 
சுமந்தாலும் 
சலிப்பதில்லை 
கருவறைகள்..........
அண்டமெல்லாம் 
அலைந்தாலும்,
அலை கடலில் 
தேடினாலும்,
அகராதியைப் 
புரட்டினாலும்,
அர்த்தம் அறிய முடியா
உயிர்ச் சரித்திரம் 
தாய்மை மட்டுமே!........
 
                     
	    
                
