கவிதை ஆனதே

வாவியில் கமலம் மலர்ந்து சிரித்திட
வாத்து மலரைச் சுற்றி ரசித்திட
பரந்த வானில் அம்புலி தவழ்ந்திட
பகலவன் வரவில் பனியும் விலகிட
மரகத மரத்தில் பவளப்பூ நிறைந்திட
மலையின் அருவியும் குளிர்ந்து சிந்திட
கயல்கெண்டை மீன்கள் ஆற்றில் துள்ளிட
கரையோரம் கொக்கும் காத்து நின்றிட
பர்வத மேனியை விருட்சங்கள் மறைத்திட
பளிங்கு நீரில் நிலவும் ஒளிந்திட
வளைந்த வானவில் மாலை சூட்டிட
வருடும் தென்றல் வாழ்த்து வழங்கிட
வெண்பஞ்சு மேகம் சித்திரம் தீட்டிட
வெண்கட்டி மழையும் விழுந்து கரைந்திட
என்மன வானில் கற்பனை விரிந்திட
எழுதினேன் தாளில் கவிதை ஆனதே ......!!