வாழ விடு
மனது குழைந்தையை போல இருந்தாலும்
நடத்தையில் சிறு பிள்ளை தனம் குடி கொண்டிருந்தாலும்
உலகம் மட்டும் எப்போதும் தன் கள்ள பார்வையோடு !!!
சிறு சிரிப்பிலும்.... சிரிப்பின் சத்ததிலேயும்...
புது புது விவரமான அர்த்தங்கள் சிலர் கண்களில்...
அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும்...
உலகம் இவ்வளவு தான் என்கிற போலி சமாதானத்தோடு
மீதி பாதையையும் கடந்து தீர்த்து விடுவோம் என்கிற முடிவோடு...
ஒட்டி கிடக்கும் விளையாட்டு மனத்தோடு...
தொடர்ந்து ஓடி கொண்டு தான் இருக்கிறது....
இரு கால்களும் இந்த மனதும்!!!!
இறைவன் சந்நிதியில் யார் நிற்பார் நீதிமானாக???
நியாயம் தீர்ப்பவன் தீர்க்கட்டும் !!
அவன் கையின் தராசு சமமாய் நிற்கும்
வியப்பான் மனிதன் அன்று !!
அவன் புரிதல் வேறு என்பதால்...
வாழ அனுப்பினான் அவன்...
வாவென்று திரும்ப அழைப்பான் ஒரு நாள் !!!
திரும்பி செல்வதற்கு முன் வாழ விடுங்கள் சிறிது காலம்
அவனிடம் உலக விந்தை கதைகளை சொல்வதற்கு....