மகிழ்வுடன் வாழ்ந்திடுவோம் மண்ணில்

​வீதிதான் வீடா இவருக்கு
விதியென நினைப்பவரா !
அமர்ந்துள்ள நிலை கண்டால்
ஆபத்தை உணராத நிலையா !

நடப்பவர்களும் கடப்பவர்களும்
விடுக்கவில்லையா எச்சரிக்கை !
நமக்கேன் வம்பென நினைப்பா
விட்டால் போதுமென நினைப்பா !

சார்ந்தவர்கள் எவரும் இலையோ
சாலையின் நடுவில் இருப்பவர்க்கு !
குப்பையென வீதியில் உள்ளாரே
குப்பைகளுடன் குப்பையாய் இங்கு !

விரக்தியின் விளிம்பில் வீற்றிருக்கும்
வருத்தத்தின் வடிவம் இவர்தானோ !
நானிலத்தில் நாளும் காண்கிறோம்
​நாணுகின்றோம் நெருங்கி கேட்டிட !

உதவிடுங்கள் உள்ளங்களே உள்ளவரை
இயன்றதை நம்மால் நல் இதயங்களே !
பிறக்கின்றோம் மறைகின்றோம் பூமியில்
மகிழ்வுடன் வாழ்ந்திடுவோம் மண்ணில் !



​ ​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Jul-14, 8:49 am)
பார்வை : 132

மேலே