அனுமதி இல்லா பூமி
என்
கதவைத் தட்டி காற்றும்
பொழுதுகளில் அனுமதி வினவும்....
கிளைகளில் கெஞ்சல்- சமயங்களில்
மொட்டுக்கள் காம்பிடம்....
காலைக்கதிர்களைப் பரப்பிட
கிழக்கிடம் விண்ணப்பிக்கும் ஆதவன்
அரிதாக...
நீந்திட நேச கோரிக்கை
நீட்டும் பறவைகள் வானிடம்
எப்போதாவது...
அமர்ந்திட பனித்துளியின் மனு
புல் நுனியிடம்
சில வேளைகளில்...
கரையைத் தொட்டிட
அலைகளின் படிவமளிப்பு
சில விழுதல்களில்....
அன்றியும் ...
மயானத்திற்குள் மறைந்தெரிந்திட
மானுடனுக்கு அனுமதி கேட்காத
சாதி சண்டைகள்....இனப் படுகொலைகள்...
மதவாதங்கள்....