நினைவிடம் மயானம்நீள்வதோ கரும்புகை
ஒற்றை மரம்
ஊருக்கு நடுவில்
சற்றும் அசைவிலை
சலசலக்கா இலைகள்!
எட்டிப் பார்த்தும்
எங்கும் காணொம்
இந்தக் காற்றினை!
எங்கோ தொலைவில்
ஏதோ புயலாய்
மழையாய்...!
*** ****
அகவிலை ஏற்றம்
அடிக்கடி நினைப்பில்!
அடக்க விலைகளும்
முடக்கிப் போடும்
கொடுக்க முடியாக்
குடும்பங்கள் நினைத்தால்
முடங்கும் தொழிலும்,
முன்செலல் ஏது!
இடங்கொடுத் தால்சிலர்
மடங்களைக் கேட்பர்!
எதற்குத் தொல்லை;
இருப்பதைக் கொண்டு
முடிந்தவர்க்கு உதவுவுவோம்!!
வெறுப்பெனும் சரக்கை
விலக்கியே வைப்போம்!
பொறுப்புடன் நடப்போம்
பேச்சைச் சுருக்குவோம்
நறுக்கெனப் பேசினால்
நமக்கிலை லாபம்!
இல்லார் உயரலாம்
இருப்போர் மாறலாம்
சொல்லை மடித்துச்
சுகப்படப் பழகுவோம்!
*** ****
அலைகள் இல்லாக்
கடற்கரை கண்டவன்
அதனுள் முத்தை
அடிக்கடி பார்த்தவன்
அதற்கென அவனை
முத்தெனப் போமோ?
அடிக்கடி அவனை
முத்திடப் போமோ?
கைகளில் முத்தைக்
கொண்டு வரட்டும்
மெய்யுறத் தழுவி
மேனி சிலிர்ப்போம்
ஐயுறல் வேண்டாம்
பொய்யுரை இல்லை
செய்வன திருந்தச்
செய்வதே அழகு!
வெறுங்கை யுடையவன்
முழம்போட் டிடுவான்!
வேலை வாங்கிச்
சோறுபோட் டிடுவோம்!
தருமம் என்பது
தன்னையும் காப்பதே!
*** ***
சாதிகள் பார்த்து
வீதிகள் சமைத்தார்
கொண்டையை முடித்துச்
சண்டைகள் வளர்த்தார்!
அண்டை அயலார்
குடிவர அழைத்தார்!
தொண்டை வரண்டும்
தண்ணிக் கழுவார்!
எங்கள் ஊரில்
இருந்தது புதுசு!
சாதியை வைத்தே
மயானம் சமைத்தோம்!
பத்தொடு மூன்று
பாசன வழிகள்!
பாச நாதிகள்
பாய்ந்தெழும் குழிகள்!
படித்ததோ நான்,அதன்
எதிர்,ஒரு வாசலில்!
பயணம் எங்கே
என்றெவர் கேட்கினும்
பதினான்,காவது
வாசலுக் கென்போம்!
பாடங்கள் அங்கே
முடிவதாய்ச் சொல்வோம்!
துறைபல கண்டன
ஓடங்கள் இன்று!
தொலந்த நினைவுகள்
துளியாய்க் கசியும்!
மாடங்கள் பெரிதாய்
மனதினுள் இல்லை!
மயானம் மட்டும்
மறப்பதற் கில்லை!
*** *****