என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

காதலனின் ! நேசம் அறியாது !
வாடி வதைந்த பூமகளின் !தோள்களுக்கு
கார் மேக வானமது பவளமாய் என்னை எடுத்து
மேகக் கோர்வையிலே மலர் தொடுக்க
தொடுத்த மலர்மேகக் கூடலிலே நான் பிறந்தேன் !
தேன்துளியாய் !!!

கிளை யோடு நான் பேச
இலையிலே மெல்ல அமர்ந்தேன்
குளிர் தேகக் கிளிகள் இரண்டு
வாஞ்சையோடு ! வானுயர காதல் பேச
வெட்கத்திலே நான் உறைந்தேன்!
தென்றல் அங்கே ! இலை அசைக்க
பருவ மங்கையின் தேகத்தில் பனிபோல!
வண்ண மலர்களின் இதழ் களிலே ! சிதறலனேன்

வண்டு ஒன்று சற்றென்று சிறகடிக்க !
என் மனமும் பதறடிக்க!
வேர் களிலே நான் இறங்கி
சங்குக் கழுத்தினிலே !சரமனேன்

காயிந்த நிலங்களிலே !
விதைத்தவன் களையெடுத்தான்
வண்ணச் சோலையிலே !
நட்டியவன் பூப் பறித்தான்

இமயமலை இடுக்கினிலே தண்ணீராய் ஊற்றெடுத்தேன்
பன்னீரால் அபிஷேகம் அங்கே! கங்கை மகளுக்கு

கயிர் திரித்த சணல் போல
தெப்பமாய் கரை திரண்டு கடலினிலும் உயிர் கலந்தேன் !

வான வில்லும் தோன்றும் முன்னே
வண்ண வண்ணக் குடை பிடித்து
கை இடுக்கிள் அதை அணைத்து
என்னை தடுத்த தேகங்களும் கொஞ்சம்

வெட்ட வெளியினிலே கைகளால் கூந்தலை மெல்ல விரித்து
நான் உயிரிறங்க நனைந்த நெஞ்சங்களும் கொஞ்சம்
கவிஞனின் இரசனைக்கு! கவிதையானேன்!
மக்களின் பசி தீற உலையில் கொஞ்சம் கொதிநீராநேன்

காற்றிலே கார்மேகக் கூட்டங்கள் கலைந்து செல்ல
இங்கு நான் புறப்பட ஏற்ப்பாடு!!!!!
தண்ணீர் மேல் ஆவியாய் !!
மீண்டும் பிறப்பேன் என்ற நம்பிக்கையில் !!!!!!
காதலியாக -பூமி
காதலனாக - வானம்

எழுதியவர் : muthulatha (25-Jul-14, 3:52 pm)
பார்வை : 537

மேலே