மீண்டும் சுழல்கிறது பூமி

விடாமல் கேட்கும்
வெடி சத்தம்,
இரத்தமும், இரத்தம் சிதறும்
சத்தமும்
விடாமல் காதுகளில்
ஒலித்துக்கொண்டு இருக்கையில்

எங்கோ ஒரு திசையிலிருந்து
பிறக்கும்
ஆதரவான கோஷங்களை
கேட்கையில்

நின்று விட்டதாக கருதிய
எங்கள் பூமி
மீண்டும் சுழல்கிறது.

எழுதியவர் : (25-Jul-14, 6:50 pm)
பார்வை : 66

மேலே