மனைவிக்கும் தோழிக்கும்
எனக்காக
துன்பங்களைத்
தாங்கிய
தோழி.
உனக்காக
என்
மனைவியையோ
என்
மனைவிக்காக
உன்னையோ
மறந்து
பொய்யாக வாழும்
சராசரி
மனிதன்
இல்லை நான்.
ஆனால்
என்
காதலில்
முழுமையும்
என் மனைவிக்கு
நட்பில்
முழுமையும்
உனக்குத் தான்.