காதலியோடு வாழ காதல் மட்டும்
என் காதலை செதுக்கியதில்
கால் சதவீதம்
செய்த வேலையில்
செலுத்தியிருந்தால்
உற்றார் ஊரார் ஒன்றுகூடி
உன்னை என்னுடன்
சேர்த்திருப்பர்.
ஓடிப்போகலாம் எனில்
ஒற்றைக்கேள்வி
ஓங்கி அறைகிறது,
உன்னையும் என்னையும்
இழுக்க முடியுமா?
என நானும்,
இவனால் ?
என நீயும்.
ஆம் அன்பே ...!
அன்று
என் காதலை செதுக்கியதில்
கால் சதவீதம்
செய்த வேலையில்
செலுத்தியிருந்தால்,
இன்று
கள்ளுக்கடையில்
கைலி கலைந்து
கவிழ்ந்து
கிடக்கமாட்டேன்.