காணா நதியொன்றின் கரைசேர ,, நில் கவனி காதலி,,,,, பால்டாயில் நாடகக் கவிதை

காணா நதியொன்றின் கரைசேர,, நில் கவனி காதலி,,,,, (பால்டாயில் நாடகக் கவிதை)
பாலில் கலந்த நீரை
பிரிக்கிறதென்றார்கள் அன்னப்பறவை!!!
இதோ இங்கொரு அன்னம்
உயிரோடுக்கலந்த பால்டாயிலையே
பிரித்துக்கொண்டுப் போகிறதே... டொடோய் ..
கூடாரக்கூரைமுனை உச்சியில் நின்று
இறக்கைப் படபடத்துச்
சொல்லிடுமொரு சமாதான மாடப்புறா
உயிர் கவ்விடும் உன் நடமாட்டத் தடசங்களை
நீயோ சமாதானமாக வந்து
சத்தமில்லாமல் திருடிச் செல்லுகிறாயே
பிறர் சமாதானங்களை
இரவும் பகலுமாக இரைத் தேடியல்லவா
அலைகிறேன்
இரவிலும் மயில்தன்
தோகையை விரித்திடுமா என்ன
உலர்த்திட்ட உன் துப்பட்டாக் கொசுவத்தின்
இளஞ்சிவப்பு மணிகள்
என் குறுங்கனவில் வந்து தடவிச்செல்லுதடி
கத்தை மயிலிறகுபோல்
எப்பொழுது பார்த்தாலும் கோபத்தையே
இரவல் தந்துவிட்டுப் போகிறாய்
என்னைப் பார் என்பதற்கா
திரும்பிப் பார்த்துப்போகிறாய்
பார்க்காமலேயே இருந்திருக்கலாம்போல்
பார்த்ததன் விளைவு
பாரே என்னை மட்டும் பார்ப்பதாய்ப் பிதற்றுகிறேன்
எதிர்வீட்டு ஜன்னலும்
ஏளனமாய் நகைக்கிறது ,,
மனப்பாடம் செய்துவிட்ட காதல் கடுதாசியை
உன்னிடம்
ஒப்பிக்க நினைக்கிறபோது
கவிதையும் வரவில்லை
பாழாய்ப்போன காதல்தான் வந்ததேனோ
""கிடக்கையில் தோன்றிடும்
கற்பனைக் மேகமூட்டங்களில்
கதாநாயகன் சேஷ்டைகள் செய்கிறேன்
கத்திச் சண்டை இடுவதாகக்கருதி
கரண்டிகளை முறிக்கிறேன்
அதிகாலை ஆறு மணியிலேனோ
நீ பார்த்திட
உடற்பயிற்சி செய்யவேண்டுமாய்
விழைகிறது தேகம்
விடியல் நோக்கி படையெடுக்கும்
சேவல் பெட்டைகளும்
என்னில் தேவ தூதர்களாகினர்
அவைகள் எனக்கான காதல் முயற்சிக்கொரு
தூண்டுகோலாக இருப்பதாய்
மூடநம்பிக்கைக் கொள்ளுகிறேன்
எனக்குள் நடமாடிய சாக்ரட்டீசிசத்தையும்
காரல்மார்க்சிசத்தையும்
முட்டாள்களின்
வெட்டிப்பொழுதுப்போக்கென
சிந்திக்கச் செய்தவள்
என்னைப் பற்றிச் சிந்திப்பாளா""
உனக்காய் எழுதிய
முல்லைக் குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை
அத்துனை அகத்தில்
நீ பாதித்திடவில்லை ஐ க்நோவ் அவ்வ்
எனக்கெனக் கிறுக்கிய
கைக்கிளைக்காலமிது
பெருந்திணை என மாற்றிவிடுகிறேன்,,
அனுசரன்