உணர்வாய் ஒரு காதல் உரையாடாமல்

தனிமை
பழகிகொண்டது என்னிடம்
உன்னுடன் சண்டையிட்ட
நாள்களில் !!!!

கவிதைகள்
பேசிகொண்டது என்னிடம்
உன்னை
நினைக்கையில் !!!

நிலவும்
வெட்கபட்டது என்னிடம்
உன் நாணத்தால்!!!

தென்றல்
சீண்டியது என்னிடம்
உன்னை நினைக்கையில் !!!

காதல்
தொற்றிக்கொண்டது என்னிடம்
உன்னை பார்க்கையில் !!!

பெண்ணே !
உன் உதடுகள்
உதிர்க்கும் வார்த்தைகளில்யாவது
வரட்டும்
நம் காதலெனும்
வாய் பேசா கவிதை !!!
அதுவரை நானும்
பேசா குழந்தை தான்
என்றும் உன்
நினைவோடு !!!

எழுதியவர் : sasikumar (27-Jul-14, 12:30 am)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 97

மேலே