முறைகள்

நீ ஏறெடுத்து பார்த்ததென்னவோ ஒருமுறை....!
என் தனிமைக்கு அன்றிலிருந்து விடுமுறை....!
இது வருவதற்கு இல்லையடி ஏதும் விதிமுறை....!
அதைத்தான் சொல்வதற்கு பற்பல செய்முறை....!
மென்மையே எதற்கு இந்த இதய-வன்முறை....!
என் உயிரை கழற்றி மாட்டுகிறாய் பன்முறை....!
விட்டுவிடு என்னுள் நீ புரியும் அடக்குமுறை....!
விருட்சமென தழைத்தோங்க நம் தலைமுறை....!

ஈர விழிகளுடன் காத்திருப்பேன் நீ வரும்வரை......!!!

எழுதியவர் : முரா கணபதி (27-Jul-14, 11:05 am)
Tanglish : muraigal
பார்வை : 169

மேலே