புதுமைக் கவிஞன்
புதுமைக் கவிஞன்
அவன்
புரட்சிப் பாடகன்
அவன்
அமுதத் தமிழன்
அவன்
ஆற்றலே எங்கும்
என்றான்
ஆசானும் அவனைப் *
போற்றினான்
நாவினிக்க பாக்கள்
சொல்வான்
பாவேந்தன் அவன்
எனதருமை
பாரதி தாசன்
புதுமை சொன்னான்
கவிதையில்
அழுத கண்ணீர் துடைத்து
புன்னகை பூத்தாள்
புதுப் பாவை !
-----கவின் சாரலன்