திருப்பிய பக்கங்கள்

திருப்பிய பக்கங்கள்தான்
திகட்டுவதில்லை
இன்றும்
படித்த வரிகள்தான்
அலுக்காது
என்றும்
சுவைக்கும் தமிழ்
அவை
அமுத வரிகள்
அவை
சிரிக்கும் பூந் தோட்டம்
அவை
சிந்தனை பிரவாகம்
அவை
விரல்கள் திருப்பிடும் போது
நெஞ்சினில்
தேன் சிந்துகிறது
பாரதியில்
பாரதிதாசனில்.....
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jul-14, 9:43 am)
பார்வை : 102

மேலே