கால்வரிசை

: என்னம்மா கால்ங்காத்தாலெ தலையில கட்டோட வந்து நிக்கறெ.
அப்பா, நீங்க தந்த சீர்வரிசை போதாதாம். உங்க மருமகன் தன் கால்வரிசையைக் கொடுத்து அனுப்பிருக்காரு.
என்னம்மா சொல்றே?
இதுவரைக்கும் என்ன தன் கைவரிசையைக் காட்டி துன்புறுத்தினாரு. நான் நேத்து கோபமா ”உங்களுக்கு வெக்கமாயில்லையா கல்யாணத்தின் போது செஞ்ச சீர்வரிசை பத்தாதுன்னு இன்னும் கேட்டுத் தொல்லை படுத்தீறிங்களே”ன்னு சொன்னேன். அவரு கோபத்திலெ என்ன எட்டி ஒதச்சாரு. மண்டை ஒடஞ்சு போச்சு.”
(வன்கொடுமை தண்டனைக்குரிய குற்றம்)