துணிச்சல்

துணிச்சல் இல்லை என்றால் உடலும் மனமும்
சேர்ந்து சோர்ந்து விடுகின்றது

துணிவின் துணை கொண்டு வாழ்ந்தால்
இன்பமும் அமைதியும் நம்மிடமே

துணிச்சல் என்பது நம் துணை
துணிவு கொண்டால் வெற்றி

பெற்றுக் கொண்டால் துணிவு
தேடித் தருமே உயர்வை

நம்மை காக்கும் துணிவு
நாட்டையும் காப்பது துணிவு

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே

துணிந்து நின்றால் வீரர் நம் பக்கம்
வென்று குவிப்போம் வீரச் செயல்கள்

அஞ்சா நெஞ்சம் அறநெறி காக்கும்
அந்நிய படைகளின் கொட்டத்தை அடக்கும்

உந்திடும் துணையே நம் வெற்றிக்கு
ஊன்று கோல், துணிவே துணை

துணையை தேடுவது கோழையின் நெஞ்சம்
துணையாக நிற்பது வீரனின் துணிச்சல்

துணிவே துணை

எழுதியவர் : பாத்திமா மலர் (28-Jul-14, 11:50 pm)
Tanglish : thunichal
பார்வை : 1362

மேலே