தமிழினம் காக்கவந்த தலைமகன்........
திரு.திருவேங்கடம் வேலுபிள்ளை வித்திட்டு
பார்வதி அம்மையார் பெற்றிட்டு
வல்வெட்டித்துறையில் விளைந்த வெள்ளரிபிஞ்சு ,
தமிழீழ தாகம் தீர்க்கவந்ததால்
வெள்ளரிபிஞ்சு ஆனவன்....
தமிழைதவிர்த்து மற்றெங்கும் தலைவணங்கா
தமிழ்மகன்.....
தன்னலமில்லா தமிழ் போர் நாயகன்.......
வீரத்தின் விளைநிலம்.....
வெற்றியின் திலகம்.....
வெள்ளை மனம் கொண்டான்...
வேங்கை கொடியோன் ....
தமிழ்ப்பெண் கற்புகளை காவுவாங்கிய இனவெறி சிங்களவன் சிரசுகொய்யவந்த தங்கத்தமிழ் வேடவன்.....
தாயில்லா தமிழ்மாந்தர்கட்கு தாயுமானவன்....
தமிழினம் அழிக்க வந்த கயவர்களுக்கு சிம்மசொப்பனம்.....
பேச்சு குறைத்து சிந்தனையை செயலில் சிந்தி
சீரியதொரு நாயகன் ஆனவன்....
உலகதமிழர் உறவானவன்.....
ஒப்பிடமுடியா ஒப்பற்றவன் .....
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என முழங்கிய போர்முரசு......
தம்பி என தமிழன் விழிக்கும் எங்கள் அண்ணன் பிரபாகரன்...
தமிழ் வாழ !
முதலில்
தமிழன் வாழவேண்டும்!
வழிபிறக்கும் நாள்
தமிழரின் பொன்னாள்.......