மழலை பூக்கள்

பனிரெண்டு மாதம் முடிந்த பாலகனே!முன்னங்களிட்டு முன்னிரு கரத்தால் ரதமாய் நீ நடக்க!..அமுதம் திகட்டிய கேணியில் உமிழ் நீர் சுரக்க!.. அழகாய் ஜொலிக்கும் சங்காய் ஈரிரெண்டு சின்ன பற்கள் அதுவே அன்பாய் கடிக்கும் நவரச கற்கள்!... இரு புருவத்தின் சாந்தியிலே தீர்ஷ்டி பொட்டு அது தான் அந்த இரவு வானத்தின் கரு நிலவு தட்டு!... நாற்காலி கொண்டு நடை பழகிய நட்சத்திரமே உனது காட்சி பதிவுகள் எல்லாம் மனதை விட்டு நீங்காத சித்திரமே !... நான் வெண்ணை திருடிய கோகுல கிருஷ்ணனை கண்டதில்லை என்னை திருடிய இந்த மழலை பூவை வர்ணிக்க வார்த்தையில்லை!... ஜெயம் கொண்ட ஜெயசூர்யாவே வாழ்க வளமுடன் !...............


ப. தாமோதரன்

எழுதியவர் : தாமு (18-Mar-11, 10:41 am)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 462

மேலே