கடல் விழுங்கிய வலை

வரவுகள் குறைந்திடும் நிலை
வரிதனைக் கூட்டுதல் பிழை
தரவுகள் காட்டிடும் கலை
தருவதில் சுகமது இலை
விறகது ஏறிய விலை
வெதும்புது அடுப்பினில் உலை
நரகமாய் அடித்திடும் அலை
நடுக்கடல் விழுங்கிய வலை.

(அம்போதரங்கம்பயிற்சி முயற்சி )

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Jul-14, 10:08 am)
பார்வை : 128

மேலே