தாமரை எழில் நீ தென்றல் நீ
மூங்கில் துளையினில்
காற்று மூழ்கி வரும்
மோகன பாடல் நீ
மூச்சுக் காற்றாய்
என் மேனியில் வீசும்
மேலைத் தென்றல் நீ
செவ்விதழ் சிரிப்பில்
குலுங்கும் முத்துக்களின்
புன்னகைத் தேறல் நீ
செந்தமிழ் புத்தகத்தில்
கவிஞர்கள் பாடிய
கவிதை வரிகள் நீ
நெஞ்சப் பொழிலில்
நித்தம் மலர்ந்திடும்
தாமரை எழில் நீ
அஞ்சி நடக்காத
வஞ்சிக் கொடி நீ
சிவந்த மலர் மேனியும்
செவ்விதழும்
செவ்வரிகளோடும் விழியும்
கொண்ட
சிவப்புத் தோழி நீ
செந்தமிழ் தோழன் நான் !
~~~கல்பனா பாரதி~~~