காதல் சுகமா சுமையா

கண்களில் கண்ணீர்

கவிதையில் புலம்பல்

தனிமையில் விசும்பல்

தன்னிலை மறந்து

ஊன் உறைவிடம் இழந்து

உற்றோரை துறந்து

உன்னை புரட்டி போடும் காதல்

சுகமானதா சுமையானதா

என்னும் குழப்பத்தில் முடிவெடுக்கிறோம்

காதல் சுகமானது என

நிஜமாய் காதல் சுமையானதுதான்

எழுதியவர் : ருத்ரன் (30-Jul-14, 6:48 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 94

மேலே