இல்லறம்
நகர்ந்து செல்லும் வாழ்கையில்
ஊர்ந்து செல்லும் பயணம்
தேர்ந்து கொள்ளும் திருமணம்
சேர்ந்து கொண்ட உறவுகள்
வாழ்வு கொண்டால் தேர்ச்சி
இளமை இனிமை வலிமை
இடையில் இல்லை வெறுமை
கோடி இன்பம் கொண்டிடும்
கொள்கையெல்லாம் ஒத்திடும்
ஒற்றுமையும் உண்மையும்
உள்ளமதில் தழைத்திடும்
உலகமே போற்றிட உயர்வுடனே வாழ்ந்திட
ஒன்றிணைந்த உள்ளத்துடன்
ஓர் கருத்தில் இருவரும்
ஒன்றித்து வாழ்ந்திடவே
நலம் பெறுவீர் நாளும்,
ஆதரவும் அன்பும்
அள்ளி அள்ளி தருகின்ற
அயலவரும் உங்களுடன்
நீங்காத இன்பமதில் என்றென்றும்
வாழ்ந்திடவே வாழ்த்திடுவர்
இத்தகைய வாழ்கையை தேடி கொள்ளும்
தம்பதிகள் பதினாறும் பெற்று
பண்புடன் வாழ்ந்திட அன்பினால் நிறைந்திட
இருமனம் ஒன்றாய் இணைத்திடுமே
இல்லறம் என்னும் நல்லுறவு