ஞானத் தீ

எண்ண அலைகளே எண்ண அலைகளே
நீங்கள் ஓய மாட்டிரோ
கடல் அலைகள் கூட ஓய்வதுண்டு
நீண்ட தூரம் சென்றுவிட்டால்
மனக் கதவுகளே மனக் கதவுகளே
நீங்கள் மூட மாட்டிரோ
பெறும் கதவுகள் கூட மூடுவதுண்டு
கால நேரம் முடிந்துவிட்டால்
அறிவுத் தென்றலே அறிவுத் தென்றலே
சற்றே வீசாது இருப்பிறோ
பகலின் ஒளி ஓய்ந்துவிட்டால்
இரவு தானே மாறி வரும்
ஞான வேள்வியை மூட்டி விட்டு
என்றும் அணையா ஜோதி வேண்டும்